தக்காளி… ‘மசக்கலி’ய பங்குடு பண்ட்டானுங்களே – ரஹ்மானின் கோபத்திற்கு என்ன காரணம்?

கடந்த 2009ம் ஆண்டு அபிஷேக் பச்சன், சோனம் கபூர் நடிப்பில் வெளியான படம் ‘டெல்லி 6’. ஓம் பிரகாஷ் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இசை ஆல்பம் செம ஹிட் அடிக்க, மசக்கலி என்ற பாடல் பாலிவுட் பார்டர் தாண்டி ஹிட் அடித்தது. இந்தப் படத்திலுள்ள ‘கேந்தா பூல்’ என்ற பாடலை பாட்ஷா என்ற இசையமைப்பாளர் ரீமேக் செய்து டி சீரிஸ் யூ ட்யூப் சேனலில் வெளியிட செம ஹிட் அடித்தது. அதேபோல மசக்கலி […]

AR Rahman angry about Masakali 2.0
AR Rahman angry about Masakali 2.0

கடந்த 2009ம் ஆண்டு அபிஷேக் பச்சன், சோனம் கபூர் நடிப்பில் வெளியான படம் ‘டெல்லி 6’.

ஓம் பிரகாஷ் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இசை ஆல்பம் செம ஹிட் அடிக்க, மசக்கலி என்ற பாடல் பாலிவுட் பார்டர் தாண்டி ஹிட் அடித்தது.

இந்தப் படத்திலுள்ள ‘கேந்தா பூல்’ என்ற பாடலை பாட்ஷா என்ற இசையமைப்பாளர் ரீமேக் செய்து டி சீரிஸ் யூ ட்யூப் சேனலில் வெளியிட செம ஹிட் அடித்தது. அதேபோல மசக்கலி பாடலையும் ரீமேக் செய்து டி-சீரிஸ் வெளியிட்டது. இந்த வீடியோவில் சித்தார்த் மல்ஹோத்ராவும் தாரா சுதாரியாவும் நடித்துள்ளனர்.

காய்ச்சல், உடல்வலி, அதன்பிறகு இருமல்..! கொரோனா அனுபவத்தை நேரலையில் பகிர்ந்த பாலிவுட் நடிகை

ஒரிஜினல் மசக்கலி பாடல் இத்தனை வருடங்களில் 22 மில்லியன் பார்வைகளையே பெற்றிருந்தது. ஆனால், இந்த ரீமிக்ஸ் பாடல் வெளியான ஐந்தே நாளில் 25 மில்லியனை கடந்துவிட்டது.


ஆனால், மசக்கலி பாடலை ரீமேக் செய்து அதை கேவலப்படுத்தி விட்டார்கள் என்றும் இந்த வெர்ஷனை ரிலீஸ் செய்யாமலே இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகிறது. இதனால் ட்விட்டரில் மசக்கலி 2.0 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில் இந்த ரீமேக் பாடலின் மூலம் ரஹ்மான் மிகவும் வேதனையில் இருப்பதாகத் தெரிகிறது. ரஹ்மான் எப்போதும் தன்னுடைய கோபத்தையும், விமர்சனத்தையும் ட்விட்டரில் சூசகப் பதிவின் மூலம் தெரிவிப்பார்.  எனினும், மசக்கலி பாடல் உருவாகக் காரணமாக இருந்த இசைக் கலைஞர்களுக்கும், படக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டார்.


அதில், “எந்தக் குறுக்கு வழியுமில்லை, நேர்த்தியாக நியமிக்கப்பட்டது, பல தூக்கமில்லாத இரவுகள், பாடல் வரிகளை எழுதி அதை திருத்தி எழுதுதல். 200-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் உழைப்பால், சிறந்த பாடலை கிரியேட்டிவாகவும் கடைசி தலைமுறையினர் வரை அதை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பாடல்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் பாடல் உருவாகக் காரணமாக இருந்த படக் குழுவினருக்குத் தன்னுடைய அன்பும் பிரார்த்தனையும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல இன்ஸ்டாகிராமில், கோபத்தை அடக்க தெரிந்தவனே சிறந்த மனிதன் என்றொரு பதிவை பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, எப்போதும் தன்னை ஒரு கோபப்படும் நபராக ரஹ்மான் காட்டியதே இல்லை. அவரின் பேச்சில் கனிவும், பொறுமையும் இழைந்தோடும். நக்கல் கூட இருக்கும். ஆனால், கோபப்படமாட்டார். அல்லது வெளிக்காட்ட மாட்டார்.

ரீமிக்ஸ் என்பதை தவறு இல்லை. அதை ரஹ்மானே செய்திருக்கிறார். 2003ம் வெளியான ‘நியூ’ படத்திற்காக தொட்டால் பூ மலருமே என்ற பாடலையும், 2007ல் வெளியான ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்காக ‘பொன்மகள் வந்தால்’ பாடலையும் ரஹ்மான் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.

ஆனால், இவ்விரண்டு பாடலுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பழைய பாடலின் வரிகளை அப்படியே எடுத்து, அதை தன்னுடைய ஸ்டைலில் ரீமேக் செய்திருப்பார் ரஹ்மான். அதில் இசை கொலையோ, வார்த்தை கொலையோ இருக்காது.

‘நேக்கு வெக்கம் வெக்கமா வருதே’: தனுஷிடம் பாராட்டு வாங்கிய ஸ்ரீத்திகா!

ஆனால், மசக்கலி பாடலில் வரிகள் மாற்றப்பட்டு, இசையும் மிகவும் சுமாராக அமைத்து இருப்பதால் தான், தனதுபடைப்பு இப்படி நாசம் செய்யப்பட்டுவிட்டதே என ரஹ்மான் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


இதில், ஜெய்பூர் போலீஸ் ஒருபடி மேலே சென்று அந்தப் பாடலை தொடர்ச்சியாக கேட்க வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனையாக வழங்கி வருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது வெளியே நடமாடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் போலீஸார் விதவிதமான விசித்திரமான தண்டனைகளை வழங்கி வரும் நிலையில், மசக்கலி 2 ரீமீக்ஸ் பாடலை தொடர்ந்து கேட்க வைத்து வருகிறது ராஜஸ்தான் போலீஸ்.

அப்புறம் ரஹ்மான் கோபப்படமாட்டாரா!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ar rahman angry about masakali 2 0

Next Story
காய்ச்சல், உடல்வலி, அதன்பிறகு இருமல்..! கொரோனா அனுபவத்தை நேரலையில் பகிர்ந்த பாலிவுட் நடிகை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com