ஆடிப் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்: டிரெண்டிங்கில் மார்வெல் ஆன்தெம்!

வார்த்தைகளால் விவரிக்க முடியாத படத்தின் உயிரை, இசையால் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ரஹ்மான்.

AR Rahman's Marvel Anthem
AR Rahman's Marvel Anthem

உலக இசைப் பிரியர்களை தனது மாயாஜால கைகளால் கட்டிப் போட்டிருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழகத்தை தலை நிமிரச் செய்தவர். இவர் சூப்பர் ஹீரோக்கள் படத்தைத் தயாரிக்கும், மார்வெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் ”அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” படத்திற்கான மார்வெல் ஆன்தெம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இசையமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேமின் இயக்குநர், ஜோய் ரஸ்ஸோ மார்வெல் ஆன்தெம் பாடலை மும்பையில் வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், “இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு புல்லரிக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத படத்தின் உயிரை, இசையால் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ரஹ்மான். அதனால் தான் அவர் ஜீனியஸ்” என்றார்.

மிகவும் எனர்ஜியுடன் ரஹ்மான் ஆடிப் பாடும் இந்த ஆந்தெம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ar rahmans marvel anthem is trending now

Next Story
இயக்குநர் மகேந்திரன் மறைவு: எனக்கு நடிப்பில் புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர் – ரஜினி புகழாரம்Actor Rajinikanth on Director Mahendran
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express