கைக்குழந்தையுடன் படப்பிடிப்புக்கு வந்த அறந்தாங்கி நிஷா - வைரலாகும் வீடியோ

பெண் போட்டியாளர்களாலும் ஸ்டாண்ட் அப் காமெடி பண்ண முடியும் என மற்ற பெண்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார் நிஷா.

Aranthangi Nisha : சினிமா பிரபலங்களுக்கு இணையாக, சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சி திறமையான பலரை அடையாளம் காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் என்றால் என்ன… அதன் பாதிப்பு உள்ளிட்ட முழு விபரங்கள் இதோ….

குறிப்பாக அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு போட்டியாளர்கள் பிரபலமானார்கள். ஆனால், அந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற பெண் போட்டியாளர் அறந்தாங்கி நிஷா தான். பெண் போட்டியாளர்களாலும் ஸ்டாண்ட் அப் காமெடி பண்ண முடியும் என மற்ற பெண்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.

விஜய் தொலைக்காட்சியை மட்டுமல்ல, தன்னுடைய நகைச்சுவை பேச்சால், மற்ற பொது மேடைகளிலும் சிரிப்பலையையை உண்டாக்கியவர் நிஷா. இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தான் ’கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகனும் இருக்கிறார். சமீபத்தில் இரண்டாவதாக பெண் குழந்தைக்கும் தாயானார் நிஷா.

5 ஆண்டுகள் கழித்து ‘நானும் ரவுடி தான்’ டீம் இஸ் பேக்!

சஃபா ரியாஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும், தனது கை குழந்தையுடன் ‘குக் வித் கோமாளி’ படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கிறார் நிஷா. குழந்தை பிறந்ததும் ஓய்வெடுக்காமல், தனது வழக்கமான பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருவதை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ரசிகர்கள். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close