விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை (GOAT – Greatest Of All Time) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கோட் படம் குறித்து பேட்டி அளித்துள்ளார். பட புரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேசிய அர்ச்சனா, “பிகில் திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவானது. இப்படம் வெளியாகி 5 ஆண்டுகளே ஆகி இருந்தாலும் நடிகர் விஜய்யின் மார்க்கெட் பிரம்மாண்டாக வளர்ந்துள்ளது.
‘கோட்’ திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், பாதி நடிகர் விஜய்யின் சம்பளம். பிகில் படத்திற்கு பிறகு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, வட இந்தியா, ஓவர்சீஸ் என அனைத்து இடங்களிலும் விஜய்யின் மார்க்கெட் அதிகமாகவே அவரின் சம்பளமும் உயர்ந்துள்ளது.
‘கோட்’ மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் பட்ஜெட் அதிகமாகியுள்ளது.” என்று கூறினார். கோட் படத்திற்கு விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“