Advertisment

ஐ.டி விசாரணைக்கு ஆஜரான அர்ச்சனா கல்பாத்தி: பிகில் வசூல் பற்றி கேள்வி

சென்னை வருமானவரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) அர்ச்சனா கல்பாத்தி அகோரம் புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Archana Kalpathi, Archana Kalpathi returns to income tax office, அர்ச்சனா கல்பாத்தி, ஏஜிஎஸ், வருமானவரித்துறை, ags entertainments, ags, bigil producer, cinema financier anubuchezhiyan

Archana Kalpathi, Archana Kalpathi returns to income tax office, அர்ச்சனா கல்பாத்தி, ஏஜிஎஸ், வருமானவரித்துறை, ags entertainments, ags, bigil producer, cinema financier anubuchezhiyan

சென்னை வருமானவரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) அர்ச்சனா கல்பாத்தி அகோரம் புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Advertisment

கடந்த ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. பிகில் படம் அர்ச்சனா அகோரம் ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மென்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்று தயாரித்த முதல் படம். தான் பொறுப்பேற்று தயாரித்த முதல் படமே பெரும் பெற்றதால் அர்ச்சனா மகிழ்ச்சியில் இருந்தார். பிகில் படத்தின் வசூல் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது அப்டேட்களையும் தெரிவித்துவந்தார்.

பிகில் படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும், அதில் இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் இந்தப் படத்திற்கு பைனான்ஸியர் அன்புச்செழியன் வரிஏய்ப்பு செய்ததாக வருமாவவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால், வருமானவரித்துறை அதிகாரிகள், கடந்தவாரம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை வீடு, மதுரை வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

மேலும், வருமானவரித்துறை அதிகாரிகள் நெய்வேலியில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து நடிகர் விஜய்யின் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

இதனிடையே பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.77 கோடி கைப்பற்றபட்டது.

அதே போல, தி.நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வழங்கப்பட்ட ஊதியம், படத்திற்கு செலவு செய்தது தொடர்பான விவரங்கள் உள்பட அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

அதன் அடிப்படையில், வருமானவரித்துறை அதிகாரிகள், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு சம்மன் அனுப்பியதையடுத்து, அவர் இன்று தனது ஆடிட்டருடன் சென்னை வருமானவரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Actor Vijay Income Tax Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment