Advertisment

சன்னி லியோன் பட ஃபர்ஸ்ட்லுக்.. வித்தியாசமான வேடத்தில் விஜய் ஆண்டனி.. மேலும் செய்திகள்

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சன்னி லியோன் பட ஃபர்ஸ்ட்லுக்.. வித்தியாசமான வேடத்தில் விஜய் ஆண்டனி.. மேலும் செய்திகள்

நடிகை சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் வருகிறார்.

Advertisment

இந்த படத்துக்கு, 'ஓ மை கோஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

வித்தியாசமான வேடத்தில் விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குநர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் ஆண்டனி கறுப்பு நிற உடையில் தலையில் தொப்பியுடன், சிலரின் ஓவியங்களைக் கொண்ட காகிதங்களை கைகளில் வைத்துக்கொண்டிருப்பது போல் இடம்பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி துப்பறியும் கதாபாத்திரத்தில் வரலாம் என்று தெரிகிறது.

மூன்று தலைமுறையினர் நடித்துள்ள தமிழ் படம்

நடிகர் சூர்யா தயாரித்துள்ள 'ஓ மை டாக்' படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய் மகன் அர்னவுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

அன்னைக்கு பாரதிராஜா நாடகத்துல நடிக்கும்போது இதுதான் நடந்தது.. இசைஞானி இளையராஜா மலரும் நினைவுகள்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'ஓ மை டாக்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

நடிகை சமந்தாவின் யசோதா எப்போ ரிலீஸ் தெரியுமா?

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளார் .

அதன்படி இந்த திரைப்படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment