Advertisment

மெர்சலுக்கு யு/ஏ சான்றிதழ், குட்டீஸை மிஸ் செய்கிறாரா விஜய்?

பெற்றோர்களின் அனுமதியுடனே ‘மெர்சல்’ படத்தை குட்டீஸ் பார்க்க முடியும்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mersal U/A certificate, Samantha Ruth Prabhu, Kajal Agarwal, Actor Vijay,

நடிகர் விஜய்க்கு குட்டீஸ் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். மெர்சல்' திரைப்படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், பெற்றோர்களின் அனுமதியுடனே ‘மெர்சல்’ படத்தைப் குட்டீஸ் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீ இயத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, உள்ளிட்ட பெரிய பட்டாளமே நடித்துள்ள படம் 'மெர்சல்'. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை, தேனாண்டாள் பிலிம்ஸ் தாயரித்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் இந்த ‘மெர்சல்’ என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திபாவளி பண்டிகையையொட்டி ரிலீஸாகவுள்ள மெர்சல் திரைப்படத்திற்கு, யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நடிகர் விஜய்க்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகம் என்ற நிலையில், மெர்சல் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது படக்குழுவிற்கு சிறிய அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. யு/ஏ சான்றிதழ் என்பதால் 12-வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் அனுமதியுடன் தான், இந்த திரைப்படத்தை பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Actor Vijay Kajal Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment