Advertisment

யூடியூப் டிரெண்டிங்: அஷ்வின் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டிரெய்லர் வெளியானது!

அஷ்வின் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தின் டிரெய்லர் யூடியுபில் டிரெண்டிங்காக உள்ளது.

author-image
WebDesk
New Update
யூடியூப் டிரெண்டிங்: அஷ்வின் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டிரெய்லர் வெளியானது!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கூக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின் குமார். அதில் தனது அபாரமான சமையல் திறமை மூலம் இறுதி சுற்று வரை வந்தார். ஆனால் அதில் இவரின் சமையலைவிட, அதிகம் வைரலானது ஷிவாங்கி இவரிடம் செய்த குறும்புகள் தான்.

Advertisment

எப்போதும் கூலாக இருக்கும் அஷ்வின் போட்டி ஆரம்பித்து விட்டால் சீரியஸாகி விடுவார். அதிலும் ஷிவாங்கி இவருடன் ஜோடி சேரும் போதெல்லாம் அஷ்வின் ஒருவழியாக ஆகிவிடுவார். சமையல் வேலைகளை ஒழுங்காக செய்யாமல் இருப்பது, போட்டியின்போது விளையாடுவது, ஒருவேளை அஷ்வினுடன் வேறு யாராவது ஜோடி சேர்ந்து விட்டால் கடுப்பாவது என ஷிவாங்கி என்ன செய்தாலும் அது சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

அஷ்வினே என்னும் தன்னுடைய கூக்குரலில் ஷிவாங்கி விளையாட்டாக அழைத்ததுக் கூட அஷ்வினின் டிரெட்மார்க் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அஷ்வின் பிரபலமானதற்கு ஷிவாங்கியும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

இப்படி அஷ்வின் கூக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி வரை வந்தாலும் அவர் போட்டியில் வெல்லவில்லை. ஆனால் ஆல்பம் சாங்ஸ், சினிமா என மிகவும் பிஸியாகி விட்டார். குட்டி பட்டாஸ், அடிப்போலி, யாத்தி யாத்தி என வரிசையாக இவர் நடித்த அனைத்து ஆல்பம் பாடல்களும் பயங்கர ஹிட்.

தற்போது அஷ்வின் என்ன சொல்ல போகிறாய் என்னும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். இதில் அவந்திகா, தேஜூ அஷ்வினி மற்றும் புகழ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஹரிஹரன் இயக்குகிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் ஆகியோர் படத்துக்கு இசையமைக்கின்றனர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து கியூட் பொண்ணு மற்றும் உருட்டு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

டிரெய்லரை பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது. இதில் யாரும் புதுமுகம் போன்றே தெரியவில்லை. அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளனர். படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர். இதுவரை 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்!

இதோ என்ன சொல்ல போகிறாய் படத்தின் டிரெய்லர்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Movie Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment