Asuran Box Office: வசூல் மழையில் தனுஷ் - வெற்றிமாறனின் அசுரன்!

Dhanush - Vetrimaaran: முதல் நாளில் படம் எதிர்பார்த்த அளவிற்கான வசூலைப் பெறவில்லை.

Asuran Box Office Collection: ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி, தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் ’அசுரன்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்லதொரு தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் அசுரன் திரைப்படம் ரூ.52 லட்சம் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் இந்த படம் 50 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது. அங்கு 87 தியேட்டர்களில் மட்டுமே அசுரன் வெளியானதால், வசூல் குறைந்துள்ளதாக தெரிகிறது.

அசுரன் திரைப்படம் வெளியான எல்லா இடங்களிலும் சேர்த்து, மொத்தமாக முதல் நாள் 17 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் படம் எதிர்பார்த்த அளவிற்கான வசூலைப் பெறவில்லை. ஆனால் பாஸிட்டிவ் விமர்சனங்களாலும், அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதாலும் அசுரனின் காட்சிகளும், வசூலும் அதிகரிக்கக்கூடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் முதல் நாளில், தனுஷின் ‘வட சென்னை’ சுமார் ரூ. 88 லட்சம் வசூலித்தது. அவரது முந்தைய படமான மாரி 2 ரூ. 40.3 லட்சம் ஈட்டியது, விஐபி 2 தொடக்க நாளில் ரூ. 50 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close