Advertisment

அசுரன் : இந்த ஜோடி செம்ம அழகு... கிளாசிக் போஸ்டர் ரிலீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
asuran, அசுரன்

asuran, அசுரன்

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மஞ்சுவாரியர் நடிக்கும்  ‘ அசுரன் ’ படத்தின் போஸ்டர் வெளியீட்டை அடுத்து இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisment

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான வடசென்னை படம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு சில காட்சிகள் அப்படத்தில் சர்ச்சையை கிளப்பி பின்வரும் நாட்களில் அந்தக் காட்சிகள் மட்டும் வெட்டப்பட்டது. நடிகர் தனுஷை வைத்து வடசென்னை இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாக்கப்படும் என்று வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்த நிலையில், கூடுதலாக தற்போது ‘அசுரன்’ படத்தின் பணிகளில் இறங்கியுள்ளனர்.

அசுரன் படப்பிடிப்பு துவக்கம்

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் மீண்டும் இணையும் படம் தான் ‘அசுரன்’. இப்படத்தில் முக்கிய வேடத்தில் மஞ்சுவாரியர் நடிக்க இருக்கிறார் என சமீபத்தில் செய்தி வெளியானது. இதை தனுஷ் தனது 21ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.

January 2019

அதன்பின், ‘அசுரன்’ படத்தின் ஃபர்ஸ்லுக் படத்தை நேற்று தனுஷ் வெளியிட்டார்.

January 2019

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று காலை கூறியுள்ள தனுஷ், அவரும், மஞ்சு வாரியர் இடம் பெற்றுள்ள அசுரன் படத்தின் புதிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Tamil Cinema Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment