பிரபுதேவா பாடலுக்கு டேவிட் வார்னர் டிக் டாக் டான்ஸ்: மில்லியனை தாண்டிய லைக்ஸ்

சமீபத்தில் பாகுபலி கெட்டப்பில் உடையணிந்து மாஸ் வசனத்தை பேசி அசத்தினார்.

David Warner dance for prabhu deva mukkala mukkabala
David Warner dance for prabhu deva mukkala mukkabala

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தமிழ் பாடலுக்கு நடனமாடியுள்ளார். டிக்டாக் உலகமே தனி. வெளியில் என்ன நடந்தாலும், டிக் டாக் யூசர்கள் தங்களை வீடியோ போடுவதில் பிஸியாக வைத்துக் கொள்வார்கள். அதோடு சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயனர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். இந்நிலையில் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பாடல் பாடுவது , குடும்பத்துடன் நடனமாடுவது, டிக்டாக் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை ஜாலி மூடில் வைத்துள்ளனர்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

அந்தவகையில் ஆரம்பத்திலிருந்தே பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகள் மற்றும் மனைவியுடன் நடனமாடும் கியூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர், அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா , தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலானது. மேலும் சமீபத்தில் பாகுபலி கெட்டப்பில் உடையணிந்து மாஸ் வசனத்தை பேசி அசத்தினார். இந்நிலையில் தற்போது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து காதலன் படத்தில் இடம்பெற்றுள்ள, “முக்காலா முக்காபுலா லேலா” பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ மில்லியன் பார்வையார்களை கடந்துவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Australian cricket player david warner dance for prabhu devas mukkala mukkabala

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com