Advertisment

ஹேப்பி பர்த்டே பிரபாஸ் : ‘பாகுபலி’யின் கல்யாண கலாட்டாக்கள்

‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?’ என்ற கேள்விக்கு அடுத்தபடியாக அதிகம் கேட்கப்படும் கேள்வி, ‘பிரபாஸுக்கு எப்போ கல்யாணம்?’

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
prabhas, baahubali

‘பாகுபலி’யின் மூலம் உலக அளவில் புகழ்பெற்றவர் பிரபாஸ். தெலுங்கு ரசிகர்கள் மட்டுமே அறிந்த பிரபாஸை, உலகம் முழுவதும் தெரிந்தவராக்கியது ‘பாகுபலி’. ஹாலிவுட் படத்தில் கூட அவர் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அவருக்கு இன்று பிறந்தநாள். 37 வயது முடிந்து 38வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபாஸ்.

Advertisment

‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?’ என்ற கேள்விக்கு அடுத்தபடியாக அதிகம் கேட்கப்படும் கேள்வி, ‘பிரபாஸுக்கு எப்போ கல்யாணம்?’

பிரபாஸின் கல்யாணம் குறித்து அவ்வப்போது விதவிதமான் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை அவர் கல்யாணத்தைப் பற்றி என்னென்ன செய்திகள் வெளிவந்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.

‘பாகுபலி 2’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, பிரபாஸுக்கும், இஞ்ஜினீயரிங் படிக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இது பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், ‘பாகுபலி 2’ ஷூட்டிங் முடிந்தபிறகு திருமணம் என்றும் செய்திகளில் கூறப்பட்டிருந்தது. ஆனால், ‘பாகுபலி 2’ படமே ரிலீஸாகி ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனால், இன்னும் கல்யாணம் நடக்கவில்லை.

‘பாகுபலி’ படத்தில் பிரபாஸின் ஜோடியாக நடித்திருந்தார் அனுஷ்கா. இதற்கு முன்னர் ‘பில்லா’ மற்றும் ‘ரிச்சி’ படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். எனவே, ‘பாகுபலி’யில் இருவரும் ரொமான்ஸும் இயல்பாக இருந்தது. படம் என்பதைத் தாண்டி, இருவரும் நிஜமான கணவன்  - மனைவி என்ற உணர்வே ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ‘பாகுபலி’ ரிலீஸுக்குப் பிறகு இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்றார்கள். ஆனால், வழக்கமான சினிமா கிசுகிசுவாகவே இந்தச் செய்தியும் அமைந்துவிட்டது.

ராசி சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பூபதி ராஜுவின் மகளை, பிரபாஸுக்குப் பெண் கேட்டதாக இந்த வருட தொடக்கத்தில் ஒரு செய்தி வெளியானது. அடுத்த வருடம் திருமணம் என்றுகூட கூறினார்கள். ஆனால், அதுவும் வதந்தியாகவே இருந்துவிட்டது.

‘பாகுபலி’ முதல் பாகம் ரிலீஸாகி இரண்டாம் பாகம் ஷூட்டிங் நடக்கும்போது, கிட்டத்தட்ட 6000 பெண்கள் பிரபாஸிடம் புரப்போஸ் செய்திருக்கிறார்களாம். ஆனால், அனைத்தையும் நிராகரித்து விட்டார் பிரபாஸ். அவருக்காக ராணா டகுபதி கொடுத்த மேட்ரிமோனியல் விளம்பரமும் வைரலானது. இவ்வளவு கலாட்டாக்கள் நடைபெற்றும் தன்னுடைய திருமணம் குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார் பிரபாஸ்.

‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?’ என்பதற்கு ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் விடை கிடைத்துவிட்டது. ஆனால், பிரபாஸுக்கு எப்போது கல்யாணம் என்பதற்கு விடை?

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment