Baakiyalakshmi serial Tamil News:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒன்றாக உள்ளன. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடத்தில் நன்றாகவே ரீச் ஆகியுள்ளது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். அவருக்கு கணவராக நடிகர் சதீஸ் நடிக்கிறார்.

இதே போல் இந்த சீரியலின் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிபர் நடித்து வருகிறார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். இருப்பினும், இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் தான் அதிக பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

நடிகை ஜெனிபர் முதலில் ஒரு குரூப் டான்சராக தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். பிறகு சில படங்களில் முன்னணி டான்சராக இருந்தார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாகவும் நடித்திருந்தார். பட வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் வந்துவிட்டார்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள ஜெனிபருக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிவிட்டதாம். அவரது கணவர் பெயர் காசி கொண்டாடி -யாம். ஜெனிபர் – காசி தம்பதியினர் கடந்த பிப்ரவரி மாதம் தான் தங்களது 15வது திருமண நாளை கொண்டாடினர்களாம்.

மேலும் இந்த தம்பதிக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் உள்ளாராம். முன்னதாக இவர்களது குடும்ப புகைப்படம் இணைய பக்கங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“