Advertisment

Barathi Kannamma : சமையல் அம்மாவாக கண்ணம்மா; போதையிலும் கொந்தளித்த பாரதி!

தூங்கி எழும் பாரதி, ஹேமா சமையல் அம்மாவை அறிமுகப்படுத்தியதை நினைத்துப் பார்க்கிறான். ஹேமாவ வச்சுதானே மொத்த குடும்பமும் சமையல் அம்மானு ஏமாத்துனீங்க.. முதல்ல ஹேமாவை அந்த ஸ்கூல விட்டு வேற ஸ்கூலுக்கு மாத்துறேன் சொல்கிறான்.

author-image
WebDesk
New Update
Barathi Kannamma : சமையல் அம்மாவாக கண்ணம்மா; போதையிலும் கொந்தளித்த பாரதி!

Vijay TV Serial: பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கும் கதையை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், சௌந்தர்யா கோயிலில் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் போனில் தெரிவிக்கிறார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் சௌந்தர்யாவின் கணவர் வேணு, தனது இளையமகன் அகிலிடம் ஹேமாவையும் அஞ்சலியையும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு புறப்பட்டு செல்கிறார்.

மருத்துவமனைக்கு செல்லும் வேணு, இங்கே சௌந்தர்யானு யாராவது அட்மிட் பண்ணியிருக்காங்களா? என்று கேட்க, அவர் இப்போது ஐசியூவில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஐசியு அறைக்கு வெளியே கண்ணாடி வழியாக தனது மனைவி சௌந்தர்யாவைப் பார்த்து கலங்கும் வேணு, உள்ளே போக முயற்சி செய்கிறார். அப்போது அங்கே வரும் பெண் டாக்டர் ஒருவர், “சார் இப்போ அவங்களை பார்க்கக் கூடாது சார்.” என்று கூறுகிறார்.

publive-image

அதற்கு வேணு, “டாக்டர், உள்ளே இருகிறது என் வொய்ஃப், நான் அவளை பார்த்தே ஆகனும்…” என்று கூறுகிறார்.

ஆனால், டாக்டர், “சொன்னால் புரிந்துகொள்ளுங்கள் சார், அவங்களை இப்ப பார்க்கக் கூடாது” என்று கூறுகிறார். அதற்கு அந்த டாக்டரிடம், வேணு, “அவங்களுக்கு என்னதான் ஆச்சு டாக்டர்” என்று கேட்கிறார்.

அதற்கு டாக்டர், “மைனர் ஆக்ஸிடெண்ட்டோ, அடியோ எதுவும் இல்லை சார், திடீர்னு மயங்கி விழுந்திருக்காங்க அவ்வளவுதான். ஸ்கேன் கூட எடுத்து பார்த்தோம்.... திடீர்னு அதிக சந்தோஷம், அதிக வருத்தம் இப்படி ரெண்டுல ஒன்னு வரும்போதுதான், சிலருக்கு இப்படி ஆகும். அந்த மாதிரி அவங்களுக்கு இன்னைக்கு ஏதாவது நடந்துச்சா?” என்று கேட்கிறார்.

அதற்கு வேணு, “ஆமாம் டாக்டர் இன்னைக்கு எங்க பேத்தியோட பிறந்தநாள், அதற்காக இன்னைக்கு கோயிலுக்கு போயிட்டிருந்தா… போற வழியிலதான் இப்படி ஆயிருக்கனும்னு நினைக்கிறேன்.” என்று கூறுகிறார். அதற்கு டாக்டர் அப்படினா அவங்களுக்கு அதிக சந்தோஷத்தினாலதான் இப்படி ஆகியிருக்கனும் என்று கூறுகிறார்.

அவங்களுக்கு பயப்படுகிற மாதிரி ஒன்னுமில்லை, இன்னும் 2 - 3 நாள்ல சரியாகிடுவாங்க என்று கூறிவிட்டு டாக்டர் புறப்பட்டு செல்கிறார்.

கண்ணம்மாவிடம் பலத்த அடி வாங்கிய சாந்தி என்னா வலி அம்மா என்று கூறுகிறாள். அருகே இருக்கும் வெண்பாவிடம், “என்னம்மா இப்படி ஆகிப்போச்சு, கண்ணம்மா என்னையும் அடிக்கிறா, அவ உங்களையும் அடிக்கிறா” என்னம்மா பன்றது என்று கேட்கிறாள்.

publive-image

அதற்கு வெண்பா, “அடி ஏண்டி நீ வேற, கண்ணம்மா அங்க வந்தாளா இல்லையானு தெரியல, அதுவுமில்லாம, அடிச்சது கண்ணம்மானு எப்படி உறுதியா சொல்ற” என்று கேட்கிறாள். அதற்கு சாந்தி, “அடிச்சது கண்டிப்பா கண்ணம்மாதாம்மா” என்று கூறுகிறாள். அதற்கு, வெண்பா, “நீ மட்டும் கண்ணம்மா வந்திருக்கும்போது, என்ன கூப்பிட்டு இருந்த அவ்வளவுதான்” என்று சொல்கிறாள். அதற்கு சாந்தி, “ம்க்கூம்… நீங்க... நானாவது கண்ணம்மாகிட்ட 2 முறைதான் அடி வாங்கியிருக்கிறேன். நீங்க இந்த சீரியல் ஆரம்பிச்சதுல இருந்து எத்தனைமுறை அடிவாங்கி இருப்பீங்கனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க..” என்று கேட்கிறாள்.

இதைக் கேட்டு வெண்பா, தான் கண்ணம்மாவிடம் அடி வாங்கியதை நினைத்து பார்க்கிறாள். அப்போது சாந்தி என்ன இன்னுமா முடியல அவ்வளவு அடி வாங்கி இருக்கீங்களா? என்று கேட்கிறாள்.

இதைக் கேட்டு டென்ஷன் ஆகும் வெண்பா, “ஏஏ… அதெல்லாம் விடு இப்ப புதுசா ஒரு பிரச்னை வந்திருக்கு… பாரதி உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு என் மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டான். அன்னைக்கு, ஹாஸ்பிட்டலுக்கு ஒரு சின்ன பொன்னு தீக்காயத்தோட சித்தி சூடு போட்டுட்டாங்கனு வந்துச்சு… நான் சித்தினா இப்படிதான் இருப்பாங்க… நீங்கதான் பார்த்து இருக்கனும்” என்று சொன்னேன். பாரதி அதை சொல்லிக்காட்டி நீயும் ஹேமாவுக்கு சித்தியா வந்தா இப்படிதான் பண்ணுவ… அதனால இதெல்லாம் வேளைக்காவதுன்னுட்டான்.” என்கிறாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் சாந்தி, அவருக்கு புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கிறத விட்டுட்டு, அந்த புள்ளைக்கு ஆயா வேலை பார்க்க ஆள் புடிக்கிறாரா என்று கேட்கிறாள்.

இதற்கு வெண்பா, “இந்த பக்கம், கண்ணம்மா பொண்ணு லட்சுமி, அந்த பக்கம் பாரதி குழந்தை ஹேமா இந்த ரெண்டு குட்டி குழந்தைங்களும் எனக்கு எதிரியா வந்து நிக்குதுங்க… பெரியவங்கள எல்லாம் ஏமாத்தி பாரதிய ஏமாத்தி என் வழிக்கு கொண்டுவந்தா, இந்த சின்ன குட்டிக் குழந்தைங்க எனக்கு எதிரா வந்து நிக்குதுங்க…” என்று கூறுகிறாள்.

அதற்கு சாந்தி, வேணும்னா கூப்டு வச்சு மிரட்டி அனுப்பலாமா என்று கேட்கிறாள். அதற்கு வெண்பா, “வேணாம் சாந்தி ஏற்கெனவே நமக்கு நேரம் சரியில்லை. கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம்… இப்போதைக்கு அந்த வீட்ல இருக்கிற ஒரே நம்பிக்கை பாரதி, அவன வச்சு எந்த பிரச்னையா இருந்தாலும் சமாளிச்சிடலாம். இப்போது பாரதி என்மேல கொஞ்சம் கோவமா இருக்கிற மாதிரி தெரியுது. கோவம் குறையட்டும் பார்த்துக்கலாம்” என்று சொல்கிறாள்.

இதைக் கேட்ட சாந்தி, சரிம்மா, அடி வாங்குனதுல முதுகெல்லாம் ஒரே வலியா இருக்கு... சுடு தண்ணீர் வச்சு ஒத்தடம் கொடுக்கனும் நான் வர்றேன் என்று கிளம்புகிறாள். அதற்கு வெண்பா, “இரு... நீ எப்படி உன் முதுகுல நீயே ஒத்தடம் கொடுப்ப” என்று கேட்க, சாந்தி “அதுக்குதான் நீங்க இருக்கீங்களே” என்று கூறுகிறாள். இதைக் கேட்டு வெண்பா, “நானா” என்று ஷாக் ஆகிறாள்.

அடுத்த காட்சியில், ஹேமா தூங்கிக்கொண்டிருக்கிறாள். அப்போது, பாரதி நல்ல போதையில், “என்னடி, ஹேய், சமையல் அம்மா போடி இங்கிருந்து…” என்று கண்டபடி உளறுகிறான். தூக்கத்தில் இருந்து எழுந்து பாரதி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் சிறுமி ஹேமா.

அடுத்த காட்சியில் அகில், தந்தை வேணுவிடம், “ஒன்னும் பிரச்னை இல்லையேப்பா, டாக்டர் கிட்ட பேசிட்டு வந்துட்டீங்க இல்ல” என்று கேட்கிறான். அதற்கு வேணு, “ஒன்னும் பிரச்னை இல்லை, பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்லை. 2-3 நாள்ல டிஸ்சார் பண்ணிடுவாங்க… எனக்கு என்னனா இவ ஏன் இந்த நேரத்தில் கோயிலுக்கு போனா” என்று கேட்கிறான். இந்த நேரத்தில் கோயிலுக்கு போயிருக்கக்கூடாது வேணு வருத்தப்படுகிறான்.

publive-image

அப்போது அங்கே வரும், ஹேமாவை அகிலும் வேணுவும் என்ன என்று விசாரிக்கிறார்கள். அதற்கு ஹேமா, “தூக்கம் போய்விட்டது. சமையல் அம்மா யாரு” என்று கேட்கிறாள். பாரதி ஏதாவது உளறி வச்சுட்டானா என்று அகில், “அவங்க சமையல் அம்மாதாம்மா” என்று சமாளிக்கிறான். ஆனால், ஹேமா, “டாடி, ஏய் சமையல் அம்மா வெளியே போடினு பல்லைக் கடித்துகொண்டு கத்துகிறார். அப்படினா சமையல் அம்மா யாரு? இன்னைக்குதான் நான் டாடிக்கு சமையல் அம்மாவை அறிமுகப்படுத்தி வச்சேன். அதுக்குல்ல அவங்க மேல கனவுல எல்லாம் கோபப்படுற அளவுக்கு என்ன ஆச்சு, டாடிக்கும் சமையல் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம் தாத்தா” என்று கேட்கிறாள்.

publive-image

எல்லோரும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். அதற்கு வேணு ஒன்னுமில்லை, உங்க டாடி ரொம்ப டயார்டா இருக்கிறான். அதனால், தூக்கத்தில உளறியிருக்கிறான் என்று கூறுகிறார்.

ஹேமா, “தாத்தா எனக்கு டாடி கூட தூங்கறதுக்கே பயமா இருக்கு” என்று கூறுகிறாள். அதற்கு வேணு, “தாத்தாகூட படுத்துக்கோ” என்று கூறி ஹேமாவை தூங்க வைக்கிறார். அகிலும் அஞ்சலியும் தூங்கப் போகிறார்கள்.

அடுத்த காட்சியில், கண்ணம்மா கவலையுடன் இருக்கிறாள், பாரதியிடம் ஹேமா அறிமுகப்படுத்தி வச்சதை நினைத்துப் பார்க்கிறாள். கண்ணம்மாவிடம் கஸ்தூரி, “ஏன் கண்ணம்மா கவலையாக இருக்கிற, நாங்க இருக்கோம் இல்ல” என்று கேட்கிறாள்.

publive-image

அதற்கு கண்ணம்மா, “கவலைக்கு என்னக்கா, அதான் தினமும் 2 குட்டி போடுதே…” என்று ஹேமா வீட்டுக்கு போயிருந்ததையும் அங்கே பாரதியை நேருக்கு நேரா சந்தித்ததையும் கூறுகிறாள். “ஹேமா சமையல் அம்மா என்று சொல்லிக்கொண்டிருந்தது என்னைதான்னு தெரிஞ்சுடுச்சு… அவருக்கு என்னை அடியோட புடிக்காது. என்கூட அவர் பொண்ணு பழகறது மட்டும் எப்படி புடிக்கும்.. அதுவுமில்லாம நான் தான் சமையல் அம்மான்றது தெரியக்கூடாதுனு பல விஷயங்களையும் மறைச்சிருப்பாங்க.. அதையெல்ல தோண்டி எடுத்து இப்ப சண்டை போடுவார். அந்த வீட்ல பெரிய பிரச்னை நடக்கும்” என்று கூறுகிறாள்.

அதற்கு நீ என்ன பண்ண முடியும் என்று கேட்க, “அவர் ஒத்துக்க மாட்டார்... அதனால, ஹேமா படிக்கிற ஸ்கூலுக்கு சமைச்சு தற மாட்டன்னு சொல்லலாம்னு இருக்கிறேன். இதுதான் முடிவு…” என்று கண்ணம்மா கூறுகிறாள்.

இந்த வருமானத்தை விட்டால் என்ன பண்ணுவ என்று கேட்கும்போது, பாவம் அவ சின்ன பொண்ணு படிப்பு பாதிக்கும், மேயப் போற மாடு கொம்புல வைக்கோல கட்டிக்கினு போறதில்ல இல்லக்கா. பார்த்துக்கலாம் என்று சொலவடை சொல்கிறாள் கண்ணம்மா. நிதானமா யோசிச்சு முடிவெடு என்று கூறிவிட்டு செல்கிறாள்.

publive-image

அடுத்த காட்சியில், போதை தெளிந்து தூங்கி எழும் பாரதி, ஹேமா சமையல் அம்மாவை அறிமுகப்படுத்தியதை நினைத்துப் பார்க்கிறான். ஹேமாவ வச்சுதானே மொத்த குடும்பமும் சமையல் அம்மானு அவளை கொண்டுவந்திருக்கீங்க… முதல்ல ஹேமாவை அந்த ஸ்கூல விட்டு வேற ஸ்கூலுக்கு மாத்துறேன் என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு செல்கிறான்.

அங்கே ஹேமா ஸ்கூலுக்கு கிளம்பி போவதற்கு தயாரக இருக்கிறாள். அப்போது பாரதி, ஹேமாவிடம் குட்மார்னிங் சொல்லி பேசுகிறான். ஆனால், ஹேமா பேசாமல் இருக்கிறாள். அதற்கு பாரதி, ஏன் ஹேமா தன்னிடம் பேசமாட்டேங்கிறா என்று கேட்கிறான். அதற்கு, வேணு, யார் கிட்ட கேட்கிற பாரதி என்று கேட்க, அதான் இந்த வீட்ல சமையல் அம்மானு ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கு இல்ல அந்த குரூப்ல இருந்து யார் வேண்டுமானலும் சொல்லலாம் என்று கூறுகிறான்.

publive-image

ஹேமா உன்னை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடறேன் என்று சொல்ல, ஹேமா தான் பாரதி கூட ஸ்கூலுக்கு போக விரும்ப வில்லை. சித்தப்பா அகில் கூட போகிறேன் என்று கூறுகிறாள். ஏன் நான் தான் கொண்டு போய் விடுவேன் என்று பாரதி சொல்கிறான். அப்போது ஹேமா, யாரும் சண்டை போட வேனாம். நானே ஸ்கூலுக்கு போய்க்கிறேன் என்று சொல்கிறாள். இதற்கு வேணு, அவள் மனசு எவ்ளோ வலிச்சு இருந்தா இப்படி சொல்வா என்று கேட்கிறான். இதையடுத்து பாரதி, தான் ஹேமாவை வேற ஸ்கூலில் சேர்க்கப்போவதாகவும் அந்த கூலில் இருந்து டிசி வாங்கிக்கொண்டு வரப்போவதாகவும் சொல்கிறான்.

அதற்கு, வேணு, “ஏன், அது எவ்ளோ பெரிய ஸ்கூல் தெரியுமா? அங்கே சேர்க்க நானும் உங்க அம்மாவும் நானும் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கோம் தெரியுமா” என்று கேட்கிறார். அதற்கு பாரதி, சரிதான் நீங்க எனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கலாம். அந்த ஸ்கூல் எனக்கு புடிக்கல. அதனால், மாத்தப் போறேன் என்று கூறுகிறான். இதைக்கேட்ட ஹேமா, எனக்கு அந்த ஸ்கூல்தான் புடிச்சிருக்கு… அங்கதான் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க… நான் அங்கதான் படிப்பேன். உங்களுக்கு புடிக்காதது ஸ்கூல் இல்ல. சமையல் அம்மா…” என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறாள். பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Bharathi Kannamma Serial Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment