Advertisment

உள்ளே வரும் புது நடிகை; வெண்பா மாறிட்டாங்களா? பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட் அப்டேட்

Barathikannamma serial venba farina not change salma explains: பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக ஃபரினா தொடர்ந்து நடிக்கவுள்ளார்; டாக்டர் பிரியாவாக நடிக்கும் சல்மா அருண் விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உள்ளே வரும் புது நடிகை; வெண்பா மாறிட்டாங்களா? பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட் அப்டேட்

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கேரக்டரில் ஃபரினாவுக்கு பதில் புதிதாக ஒரு நடிகை நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் புது நடிகை சல்மா.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதில் பாரதியாக அருணும், கண்ணம்மாவாக ரோஷினியும் நடித்து வருகின்றனர். இந்த முன்னனி கதாப்பாத்திரங்களுக்கு இணையாக ரசிகர்களிடயே வரவேற்பை பெற்ற கேரக்டர் வில்லி வெண்பா. இந்த கேரக்டரில் நடித்து, தமிழ் குடும்பங்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பவர் ஃபரினா. வெண்பாவாக ஃபரினா செய்யும் வில்லத்தனத்தால், இந்த கேரக்டரில் வேறு யாரையும் ரசிகர் நினைத்துப் பார்ப்பதில்லை. ரசிகர் ஃபரினாவை வெண்பா என்ற அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஃபரினா கர்ப்பமான செய்தியை சமூக வலைதளங்களில் தெரிவித்தார். அதேநேரம் பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக ஒரு நடிகையும் எண்ட்ரியாகவே, ஃபரினாவுக்கு பதில் வெண்பா கேரக்டரில் இவர்தான் நடிக்கப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் ஃபரினா சமூக வலைதளங்களில் வீடியோ மூலம், வெண்பா கதாப்பாத்திரத்தில் அவரே தொடர்ந்து நடிக்க உள்ளதாக கூறினார்.

இதேபோல், புது நடிகையாக சீரியலுக்குள் வந்துள்ள சல்மா அருண், சமூக ஊடக லைவ்வில், தான் வெண்பா கேரக்டரில் நடிக்கவில்லை எனவும், சீரியலில் டாக்டர் பிரியாவாக நடித்து வருவதாகவும் விளக்கமளித்தார். மேலும், அந்த லைவ்வில் உங்கள் வெண்பா இதோ நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் என ஃபரினா பக்கம் கேமராவை திருப்பி காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Farina Azad Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment