டாடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகை அபர்னா தாஸ் சொந்த வீடு கட்டிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் வெளியான நிஜன் பிரகாஷன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அபர்னா தாஸ் தமிழில் பீஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் அபர்னாவுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. கவின் நாயகியாக நடித்த இந்த படத்தில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கவின் – அபர்னா இவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படங்களை கமிட் செய்து வரும் அபர்னா தாஸ், தற்போது புது வீடு கட்டி குடியேறி உள்ளதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் இது எனது மிகப்பெரிய மைல்கல். எனது சொந்த வீடு என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. பலரும் அபர்ணாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“