Advertisment

அது கார் இல்லீங்க... பிளேன் மாதிரி இருந்தது' விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ்-ஐ புகழ்ந்த பூஜா ஹெக்டே

Tamil Cinema Update : படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது. பீ்ஸ்ட் படக்குழுவை ரொம்பவே மிஸ் செய்கிறேன்.

author-image
WebDesk
New Update
அது கார் இல்லீங்க... பிளேன் மாதிரி இருந்தது' விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ்-ஐ புகழ்ந்த பூஜா ஹெக்டே

Beast Heroine Pooja Hegde Say About Car Drive With vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாகவும், இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

Advertisment

சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தில் பாடல்கள், ப்ரமோக்கள் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 2-ந் தேதி பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன், மற்றும் நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட சிலரை விஜய் தனது புதிய ரோல்ஸ் ரொய்ஸ் காரில் ட்ரிப் அழைத்துச்சென்றார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைராக பரவியதை தொடர்ந்து விஜயுடன் காரில் சென்ற அனுபவம் குறித்து பிகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பேசியுள்ள நாயகி பூஜா ஹெக்டே, விஜயுடன் காரில் சென்றது ப்ளைனில் சென்றது போல் உள்ளது என்று கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், இந்த ட்ரிப் காரில் சென்றது போல் இல்லை ப்ளைனில் சென்றபோது போலத்தான் இருந்தது. பீஸ்ட் படப்பிடிப்பில் ரொம்ப ஜாலியா இருந்தோம் ஆனால் இப்போது சோகமாக இருக்கிறது.

படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது. பீ்ஸ்ட் படக்குழுவை ரொம்பவே மிஸ் செய்கிறேன். என்னுடைய பிறந்த நாளை பீஸ்ட் செட்டில்தான் கொண்டாடினேன். அது எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. இந்த படத்தின் ஷூட்டிங் போகும்போது பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் உள்ளே போனதுக்கு அப்புறம்தான் தெரியும் அவர் ரொம்ப ஜாலி கேரக்டர்னு.

பீஸ்ட் படத்திற்கு முதலில் அரபிக்குத்து பாடலுக்காகத்தான் சென்றோம். அங்கேயே நெல்சன் ஜாலியா செம்ம ஃபன்னா இருந்தாரு என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Pooja Hegde
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment