scorecardresearch

பீஸ்ட் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை: செல்ஃபி எடுத்து மகிழும் ரசிகர்கள்

Beast Vijay statue: நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஒரு நல்ல ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஈரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் ரூ.4 லட்சம் மதிப்பில் விஜய் சிலையை வைத்துள்ளது.

பீஸ்ட் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை: செல்ஃபி எடுத்து மகிழும் ரசிகர்கள்

Beast Vijay statue Launched: நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஒரு நல்ல ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஈரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் ரூ.4 லட்சம் மதிப்பில் விஜய் சிலையை வைத்துள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று (ஏப்ரல் 13) திரையரங்குகளில் வெளியானது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிரிபார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திரையரங்குகளில் ஏப்ரல் 13-ல் வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது. விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில், விஜய் ரா அதிகாரியாக நடித்துள்ளார். தீவிரவாதிகளிடம் சிக்கிய மால் ஒன்றை ரா உளவுத் துறை அதிகாரி விஜய் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன்று, ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக தங்கள் நிறுவனத்தின் முன் ரூ.4 லட்சம் மதிப்பில் பீஸ்ட் படத்தில் வரும் விஜய் கதாபாத்திரத்தின் சிலையை வைத்துள்ளது.

நடிகர் விஜய்யின் ரசிகர்களை ஈர்ப்பதற்காக, ஈரோடு மாவட்டம், கோபி மொடச்சூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவன உரிமையாளர் பாலாசிங், 4 லட்சம் ரூபாய் செலவில், பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் போன்ற உருவ சிலை ஒன்றை தனது கடையில் ரசிகர்கள் பார்வைக்கு வைத்து உள்ளார். ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட இந்த சிலை பிளாஸ்டிக்கால் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் சிலை வைப்பது என்பது விஜய் ரசிகர்களை கவரும் வகையில் வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக நிறுவனத்தின் முன், பீஸ்ட் படத்தில் வரும் விஜய் சிலையை வைத்துள்ளது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது. பீஸ்ட் நிச்சயமாக பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைக்கும் என்று சினிமா வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை மேலும் ஒரு புரோமோஷனாக தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விஜய்யின் பீஸ்ட் சிலையை வைத்திருப்பது விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Beast vijay statue worth 4 lakh in private company

Best of Express