bharathi kannamma serial Tamil News: விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. ஏகப்பட்ட டிவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கண்ணம்மாவின் மகள் லக்ஷ்மியை பாரதி அவரது வீட்டுக்கு கூட்டி அழைத்துச் சென்றார். ஏனென்றால், கண்ணம்மா தான் அவளது அம்மா என தெரிந்துவிட்ட காரணத்தினால் அவர் இப்படி செய்கிறார். இந்நிலையில், கண்ணம்மா 2 முறை வந்து கேட்டபோது, ‘லக்ஷ்மியின் அப்பா அம்மா வந்தால் தான் அனுப்புவேன்’ என கண்டிப்பாக கூறுகிறார் பாரதி. எனவே கண்ணம்மா உண்மையை சொல்லாமல் லக்ஷ்மியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்.

தற்போது கண்ணம்மா அவரது வீட்டில் இருக்கும் ஹேமாவை கூட்டி சென்று பாரதியின் வீட்டில் விட்டுவிடுகிறார். அதன் பிறகு லக்ஷ்மியை தன்னுடன் அனுப்பும்படி கேட்கிறார். ஆனால் அப்போதும் பாரதி தனது வழக்கமான பதிலை கூறுகிறார். இந்த காட்சி அடுத்த வார ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
பிறகு, ‘நான் தான் லக்ஷ்மியோட அம்மா.. என சொடக்கு போட்டு கூப்பிடும் கண்ணம்மா, லட்சுமி என் சொந்த பொண்ணு’ என ஆவேசமாக கூறுகிறார். அதோடு, தன்னை சமையல் அம்மா என கூப்பிடும் லட்சுமியிடம் ‘இனிமேல் என்னை அம்மா என்றே கூப்பிடு’ என சொல்லிவிட்டு உடன் கூட்டி செல்கிறார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ள பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை கூட்டியுள்ளது. தற்போது சீரியல் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த ப்ரோமோ இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil