bharathi kannama serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா வலம் வருகிறது. இந்த சீரியலுக்கு என்றே, ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று தான். மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க உள்ளது என்பது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்ததாக நடக்கவிருக்கும் காட்சி இதுதான் என்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சீரியலில் வில்லியாக வரும் ஃபரினா அசாத் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கர்ப்பமாக உள்ள அஞ்சலி நடிகர் விஜயின் தெறி (ஈனா மீனா டீக்கா) பாடலுக்கு குட்டி நடனம் போடுகிறார். அவரை தொடர்ந்து உண்மையில் கர்ப்பமாக வெண்பா அந்த வீடியோவில் தோன்றுகிறார்.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருவதோடு, சுவையான கமெண்ட்ஸ்களை தட்டிச் சென்றுள்ளனர், இதில் ‘ரெண்டு பேரும் பிரக்னன்ட்டா’ என்ற கேள்வியை ஒரு ரசிகர் கமெண்டில் கேட்டுள்ளார். மற்றொரு ரசிகரோ “சீரியலில் மட்டும் ஸ்டொமக் தெரிய மாட்டினுதே, அந்த சீக்ரெட் கொஞ்சம் ரிவில் பண்ணுங்களே’ என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஃபரினா வோ “சீக்ரெட் மின்ஸ் சீக்ரெட்” என்றுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கர்ப்பமாக உள்ளன நிலையில், அடுத்ததாக அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்வு தான் நடிக்கவுள்ளதாக இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“