நிஜம், நம்புங்க..! கண்ணம்மா, பாரதி, 2 குழந்தைங்க சந்தோஷமா கூடி இருக்காங்க!

Bharathi kannama shooting spot pics goes viral Tamil News: ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு தளத்தில் பாரதி-கண்ணம்மா தம்பதியின் 2 குழந்தைகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமா இருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

Bharathi kannama serial Tamil News: Bharathi kannama shooting spot pics goes viral

Bharathi kannama serial Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரமாக வரும் கண்ணம்மா ஏகப்பட்ட பிரச்சனைகளை தனியாக எதிர்கொண்டு வந்தார். இதனால் அதிருப்தி கலந்த சோகத்துடன் இருந்த ரசிகர்கள் கண்ணம்மாவின் வாழ்வில் வசந்தம் வீசாதா என எதிர்பார்த்திருந்தார்கள். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகிய காட்சிகள் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாகவே அமைந்துள்ளன.

மாமியார் – மருமகள், குடும்ப பிரச்சனை போன்றவற்றை மையமாக வைத்து காட்சியமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் பாரதியின் அம்மாவாக, கண்ணம்மாவின் மாமியாராக வரும் ரூபஸ்ரீ, அவரின் இடண்டாவது மருமகள் கண்மணி மனோகரன், பாரதியின் அப்பாவாக ரிஷி ஆகியோர் அனைவருமே கண்ணம்மாவுடன் எலியும் பூனையுமாக இருப்பார்கள். இருப்பினும், சமீபத்தில் இந்த சீரியலின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவர்கள் அன்பாக கொஞ்சிக் குலாவி மகிழ்வது போல் உள்ளது.

பாரதிகண்ணம்மா ஷூட்டிங் இடைவேளையின் போது க்ளிக் செய்யப்பட்ட இந்த புகைப்படத்தில், பாரதி- கண்ணம்மா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இந்த ஜோடியின் அழகான இரண்டு குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக சாப்பிட்டும், அன்பாக கொஞ்சி விளையாடுவது போல் உள்ளது. சீரியல் ரசிகர்களால் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannama serial tamil news bharathi kannama shooting spot pics goes viral

Next Story
வெல்கம் பேபி..! விஜய் டிவி சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை பொறந்தாச்சு!Serial actress Sridevi Ashok, Vijay TV Serial actress Sridevi Ashok, விஜய் டிவி, சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு பெண் குழந்தை பிறந்தடு, சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக், actress Sridevi Ashok delivery a baby girl, actress Sridevi Ashok blessed a baby girl, tamil entertainment news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com