Bharathi Kannamma Latest: கண்ணம்மாவை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் பாரதி!

Bharathi kannamma latest promo barathi on emotional: கண்ணம்மாவிடம் கெஞ்சும் பாரதி; கண்ணம்மாவின் பதில் என்ன? விஜய் டிவியின் புதிய ப்ரோமோ

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிடம் பாரதி கெஞ்சும் வகையில் வெளியாகியுள்ள ப்ரோமோ ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு எபிஷோடும், அதிரடியான திருப்பங்களுடன் இருப்பதால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரியலின் சுவாரஸ்யமான திரைக்கதை சீரியலை டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் வைத்துள்ளது.

இந்த நிலையில், விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில், பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார்கள் அஞ்சலியும் ஹேமாவும். அதை தெரிந்துக் கொண்ட பாரதி அவர்களை கண்ணம்மா இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.

கண்ணம்மா வீட்டுக்கு வந்தவுடன், டாக்டர் அங்கிள் வந்து அஞ்சலியையும் ஹேமாவையும் கூட்டிட்டு போனதாக சொல்கிறாள் லட்சுமி.

கொஞ்ச நேரம் கழித்து, கண்ணம்மா வீட்டுக்கு வரும் பாரதி, என் பொண்ணு ஹேமாவ என்கிட்ட இருந்து பிரிச்சிடாதே என கண்ணம்மாவிடம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகிறான்.

அப்போது கண்ணம்மா, உன்னையே அறியாம, ஹேமாவ என் பொண்ணு என் பொண்ணுனு சொல்லி, என்கிட்ட கெஞ்சுறியே, அத கேட்க சந்தோஷமா இருக்கு என மனதுக்குள் நினைக்கிறாள்.

இவ்வாறு ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், பாரதிக்கு எப்படி அஞ்சலியும் ஹேமாவும் கண்ணம்மா வீட்டுக்கு வந்தது தெரிந்தது. கையெடுத்து கும்பிடும் பாரதியிடம் கண்ணம்மா என்ன சொல்லியிருப்பாள் என தெரிந்துகொள்ள, சீரியலின் எபிஷோடுகளை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma latest promo barathi on emotional

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com