தன் அம்மா கண்ணம்மாவை அழைத்து வரும் ஹேமா? ஒருவேளை சீரியல் முடிய போகுதோ?

பொய் பொய்யா… பொய் பொய்யா சொல்லுறியே வெண்பான்னு கதை

bharathikannamma serial vijaytv bharathi kannamma பாரதி கண்ணம்மா சீரியலில், பொய் பொய்யா… பொய் பொய்யா சொல்லுறியே வெண்பான்னு கதை போனாலும்.. நம்ப மாட்டேன் நம்ப மாட்டேன் என ஒரு முறை கூட பாரதிக்கு வெண்பா மீது சந்தேகமே வரல. பாரதியை வெண்பா படிக்கும்போதே லவ் பண்ணினா. பாரதி வேறு பெண்ணை காதலிச்சான்.

அந்த பெண்ணை பழிவாங்க கிளம்புகிறாள் வெண்பா. வெண்பா செட்டப் செய்த விபத்தில் அந்த பெண்ணோடு சேர்ந்து பாரதியும் மாட்டிக்கறான். ஆனால், உயிர் பிழைத்து விடுகிறான். பாரதி தன்னை விட்டு போக கூடாதுன்னு, பாரதிக்கு குழந்தை பிறக்காதுன்னு வெண்பா பொய்யா சர்டிபிகேட் குடுத்து விடுகிறாள். வெண்பாவும் டாக்டர்.. பாரதியும் டாக்டர். வெண்பாவை அப்படியே முழுசா நம்பி இன்னொரு டாக்டர் ஒப்பீனியன் கூட கேட்காம இருக்கான் பாருங்க பாரதி, அங்கே ஆரம்பிக்குது கதையில் முட்டாள்தனம்.

இதே வெண்பா.. பாரதியின் பொண்டாட்டி கண்ணம்மாவுக்கும் குழந்தை பிறக்காதுன்னு சர்டிபிகேட் கொடுத்து, உன் மேல சந்தேகம் வரக்கூடாதுல்ல பாரதி அதுக்குத்தான் இப்படி ஒரு சர்டிபிகேட்ன்னு சொல்லி சமாளிக்கறா. அப்போதும் வெண்பாவின் மேல சந்தேகம் வரலை பாரதிக்கு. இவ்வளவு ஏன்.. கண்ணம்மாவின் பள்ளித் தோழன் ஒருவனுடன் வெண்பா அவளை இணைச்சு பேச அப்போது கோபமா பேசறான் தவிர, வெண்பா எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யறான்னு கொஞ்சமும் யோசிக்கலை.

…ஒரு பெண்ணின் புருஷன் தனது மனைவியின் கர்ப்ப சர்டிபிகேட் மீது சந்தேகப்பட்டு, இந்த குழந்தையை அபார்ட் பண்ணிடுங்க சார்.. யாரோ ஒருத்தன் குழந்தைக்கு நான் அப்பான்னு சொல்லிக்க விரும்பலைன்னு சொல்ற அளவுக்கு நிலைமையை கொண்டு வந்து விட்டவள் வெண்பா.

8 வருடத்திற்கு பிறகு கதை காட்டினாலும், பாரதியின் கதாபாத்திரத்தில் மாற்றம் கடுகு அளவு கூட இல்லை. அதை விடுங்க, இத்தனை வருஷமா, செளந்தர்யா கண்ணில் படாத கண்ணம்மாவை, ஹேமா வீட்டுக்கு அழைத்து வருகிறாள் ஹேமா. அதுதான் கருவின் மைப்புள்ளியே. புரோமோவை பார்த்த எல்லோரின் முதல் கேள்வியும் இதுதான். ஒருவேளை சீரியல் முடிய போகுதோ?

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathikannamma serial vijaytv bharathi kannamma hotstar vbharathi kannamma episode

Next Story
வனிதா காட்டில் மழை: ஜீ தமிழ் சீரியலில் ஒப்பந்தம்?vanitha, vanihta vijayakumar, vanitha vijayakumar committed in zee tamil tv serial, zee tamil tv, வனிதா விஜயகுமார், வனிதா, vanitha vijayakumar chance to cinema, ஜீ தமிழ் டிவி சீரியல், vanitha vijayakumar acting in tv serial, திருமதி ஹிட்லர் சீரியல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com