Advertisment

வீடியோ: தமிழ் சினிமாவில் இடம்பெற்ற பாரதியார் பாடல்கள்!

பாரதியாரின் பாடல்கள் / கவிதைகள், பல திரைப்படங்களில் பாடல்களாகவும், வசனங்களாகவும் இடம் பெற்றுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bharathiyar Birthday Songs

Bharathiyar Birthday Songs

Bharathiyar Songs: கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர், மகாகவி பாரதியார். இவரது இயற்பெயர் சுப்பிரமணிய பாரதியார்.

Advertisment

கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற இவர், தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை விதைத்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.

பாரதியாரின் பாடல்கள் / கவிதைகள், பல திரைப்படங்களில் பாடல்களாகவும், வசனங்களாகவும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில குறிப்பிடத் தகுந்த பாடல்களை இங்கே தருகிறோம்.

’பாரத சமுதாயம்’ எனும் இந்தப் பாடல் ’வாழ்க்கை’ படத்தில் டி.கே.பட்டம்மாள் பாடியது.

’நாம் இருவர்’ என்ற படத்தில் இடம் பெற்ற இப்பாடலையும், டி.கே.பட்டம்மாள் தான் பாடினார்.

1961-ல் வெளியான ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலை, பி.பி.ஸ்ரீநிவாஸும், பி.சுசீலாவும் இணைந்து பாடினார்கள்.

இதுவும் அதே ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் இடம் பெற்ற பாடல் தான். பாடியவர்கள் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், டி.லோகநாதன்.

1981-ல் வெளியான ‘ஏழாவது மனிதன்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கே.ஜே.ஏசுதாஸ் பாடினார். பாடலுக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

‘நீதிக்கு தண்டனை’ படத்தில் இடம் பெற்ற இப்பாடலை ஏசுதாஸுடன் இணைந்து, சுவர்ணலதா பாடியிருக்கிறார். பாடலுக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

’பாரதி’ படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்தப் பாடல், இன்றும் பலரின் விருப்பப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பாடலைப் பாடியவர் ஹரீஷ் ராகவேந்திரா.

இந்தப் பாடலும் ‘பாரதி’ படத்தில் இடம் பெற்றது தான். பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.

’பாரதி’ படத்தில் இடம் பெற்ற இப்பாடலை ராஜ்குமார் பாரதி பாடியிருந்தார்.

இப்பாடல் ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தில் பாடகர் ஹரிஹரன் பாடியது. இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment