பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்கிறாரா ஓவியா?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் துவங்க உள்ள நிலையில், அதன் குறித்த தகவல்கள் சில கசியத் தொடங்கியுள்ளது. ஓவியா பற்றிய தகவல்...

தமிழ் திரையுலகில், பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிதான் பிக் பாஸ். சென்ற ஆண்டு வெறும் நடிகராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன், இந்த அஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராகத் தொகுத்து வழங்க உள்ளார். இந்த மேடையைத் தனது அரசியல் பிரவேசத்திற்கு நிச்சயம் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இந்த ஆண்டு பல மாற்றங்கள் உள்ளது. திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்களில் ஒருவர், அரசியல் பிரமுகர்களில் ஒருவர் எனப் பலர் பங்கு பெற உள்ளனர்.

இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிலர் நடிகை சிம்ரன் பங்கேற்க உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் பலர் கூறியது போல் நடிகை ரம்பா இதில் பங்கேற்கவில்லை என்ற உறுதி தகவல் வெளிவந்துள்ளது.

இதை எல்லாம் விட ஒரு முக்கிய தகவல் உங்களுக்காகக் காத்திருக்கிறது. பிக் பாஸ் 2 இல்லத்திற்கு ஓவியா வரப் போகிறார் என்று சில உளவுத் தகவல்கள் தெரிவிக்கிறது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு சின்ன விஸிட் போட உள்ளார் ஓவியா. அதை தவிர முழு நேரப் பங்கேற்பாளராக இவர் இருக்கப்போவது இல்லை.
இந்த ஆண்டின் பிக் பாஸ் 2-வில் 100 நாட்களில் ஒரு நாள் ஓவியா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close