ஆக்‌ஷனில் இறங்கிய பிக் பாஸ் 2! அப்படி என்ன வேலை நடக்குது தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் தற்போது சுட சுட ரெடியாகிக் கொண்டிருக்கிருக்கும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியின் குழு அடுத்தகட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியால் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இதே நிகழ்ச்சியின் 2ம் பாகம் வரும் ஜூன் 11 தேதி தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான முதல் பாகத்தின் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் அனைவரின் வீட்டிலும் ரீ எண்ட்ரி ஆகிறது “பிக் பாஸ் 2”.

‘நல்லவர் யார்? கெட்டவர் யார்?’ என்று அனைவருக்கும் அட்வைஸ் கொடுக்கும் அளவில் இருக்கிறது சமீபத்தில் வெளியான டீசர். 60 கேமராக்கள் சுற்றிக் கண்காணிக்க, 100 நாட்கள் ஒரே வீட்டில் குடியிருக்க 15 பிரபலங்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். 15 பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் யார் என்ற க்ளூ இன்னும் ஒருவருக்குத் தெரியவில்லை.

ஆனால் அதற்குப் பதில் புதிதாய் ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. “பிக் பாஸ் 2” டப்பிங் வேலை நேற்று தொடங்கி இருக்கிறது. நடிகர் கமல் ஹாசன் டப்பிங் கொடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் அடுத்தடுத்து டீசர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கமல் ஹாசன் கொடுத்துள்ள இந்த டப்பிங் அடுத்தபடியாக வெளியாக இருக்கும் டீசருக்காக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close