Advertisment

பிக் பாஸ் 13: போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்களை அள்ளி வீசிய சல்மான் கான்!

Salman Khan: பிக் பாஸ் நிகழ்ச்சியின் "முதல் ஃபைனல்" ஒரு மாதத்தில் நடைபெறும் என்றும் அவர் பார்வையாளர்களுக்குத் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss 13, Salman Khan

Bigg Boss 13, Salman Khan

Bigg Boss Hindi: இந்தி பிக் பாஸின் துவக்கத்துக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில், செப்டம்பர் 29-ம் தேதி இரவு அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் இந்தி 13-னின் பிரீமியர் சற்று நேரத்தில் ஃபன்னாக மாறியது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இது ஃபன் நிகழ்ச்சியாக மாறியதில் ஆச்சர்யம் இல்லை.

Advertisment

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதன்முறையாக எல்லாமே "எக்ஸ்பிரஸ் மோடில்" அதாவது வேகமான இயக்கத்தில் நடக்கும் என்று சல்மான் கான் கூறினார். அப்போது நிகழ்ச்சியின் "முதல் ஃபைனல்" ஒரு மாதத்தில் நடைபெறும் என்றும் அவர் பார்வையாளர்களுக்குத் தெரிவித்தார். சின்ன சிட் - சாட்டிற்குப் பிறகு, தொகுப்பாளர் சல்மான் கான், பிக் பாஸ் 13-னின் முதல் போட்டியாளராக சித்தார்த் சுக்லாவை அறிமுகப்படுத்தினார். ”கிசி கே ஹாத் நா ஏகா யே லட்கா” என்ற பாடலுக்கு நடனமாடியவாறு அவர் பிக் பாஸ் மேடையில் எண்ட்ரியானார். அவரைத் தொடர்ந்து, எழுத்தாளர் சித்தார்த் டே மற்றும் பராஸ் சப்ரா ஆகியோர் போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.

தன்னுடன் பல படங்களில் பணியாற்றிய இசை இசையமைப்பாளர் அபு மாலிக்கை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவேற்றார் சல்மான் கான்.

இந்த முறை சற்று வித்தியாசமாக, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஆண் போட்டியாளர்கள் டிஸ்ப்ளே அறையில் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.அதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாடல் அசிம் ரியாஸ் 5-வது போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

தொலைக்காட்சி நடிகை மஹிரா சர்மா ஐந்தாவது போட்டியாளராக எண்ட்ரியானார், அவரை சல்மான் கான் வரவேற்றார். மஹிரா தனது எண்ட்ரி நடனத்தை கரீனா கபூரின் பிரபலமான பாடலான தரீஃபான் பாடலுக்கு ஆடினார். பின்னர் சல்மான் பி.எஃப்.எஃப் (பெட் ஃப்ரெண்ட் ஃபாரெவர்) என்ற புதிய கருத்தை மஹிராவுக்கு அறிமுகப்படுத்தி, தனது பி.எஃப்.எஃப்-ஐ தேர்வு செய்யும்படி கேட்டார். பின்னர் யாருடன் செல்ல விரும்புகிறீர்கள் என்று சல்மான் மஹிராவிடம் கேட்டபோது, சித்தார்த் சுக்லாவை நோக்கி ’இந்த ஜெண்டில்மேனுடன் தான்’ என்றார் மஹிரா.

பிக் பாஸ் வீட்டில் 'பாத்ரூம் டூட்டியை' மகிரா ஷர்மா கவனித்துக்கொள்வார், அந்த கடமையைச் செய்யஅசிம் ரியாஸை தனது டீமாக தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து முதல் போட்டியாளராக மஹிரா வீட்டிற்குள் நுழைந்தார்.

ஏழாவது போட்டியாளராக தேவோலீனா பட்டாச்சார்ஜி. ”ஆஷிக் பனயா ஆப்னே” பாடலுக்கு நடனமாடி மேடையை அதிர வைத்தார். அவருக்கு 'சமையலறை வேலை' ஒதுக்கப்பட்டது, இதற்காக, சித்தார்த் சுக்லாவை தனது சமையல் பார்ட்னாராக தேர்வு செய்தார் தேவோலீனா. ஆண் போட்டியாளர்கள் டிஸ்ப்ளே அறையில் காத்திருந்தபோது, தேவோலீனா வீட்டிற்குள் நுழைந்தார்.

உத்தரான் படத்தில் தபஸ்யா என்ற கேரக்டரே சொந்த பெயராக மாறிய ராஷாமி தேசாய், ”காமரியா ஹிலா தே” என்ற பாடலுக்கு தனது எண்ட்ரி டான்ஸை ஆடினார். அர்பாஸ் கானின் மகன் அர்ஹான் கானுடனான திருமண வதந்தி குறித்து சல்மான் ரஷாமியிடம் கேட்டார். அதற்கு, அப்படி எதுவும் இல்லை என்றும், தான் அவருடன் டேட்டிங் செய்யவில்லை என்றும் பதிலளித்தார் ரஷாமி. அவருக்கு 'சமையல் பணி' ஒதுக்கப்பட்டது. இதற்கு அவர் சித்தார்த் சுக்லாவை தனது கூட்டாளராக தேர்வு செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து தொலைக்காட்சி தொடரில் ரீல் கணவன் மனைவியாக நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

பின்னர் செய்தி தொகுப்பாளரான ஷெபாலி பாகா, தன்னை பஞ்சாப்பின் கத்ரீனா கைஃப் என்று அழைக்கும் பாடகி-நடிகை ஷெஹ்னாஸ் கவுர் கில் போன்ற போட்டியாளர்களை சல்மான் கான் அறிமுகப்படுத்தினார். ஷெஹ்னாஸ் மற்றும் பராஸ் சாப்ரா ஆகியோருக்கு ரேஷன் பணி ஒதுக்கப்பட்டது, ஷெபாலிக்கு 'தோட்டம் மற்றும் நீச்சல் குள வேலை’ வழங்கப்பட்டது, அவர் சித்தார்த் டேவை தனது கூட்டாளராக தேர்வு செய்தார்.

நிகழ்ச்சியில் அடுத்த போட்டியாளராக டால்ஜியட் கவுரை சல்மான் கான் வரவேற்றார். அவர் மீண்டும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கத் தயாரா என்று சல்மான் கேட்டார். அதற்கு "ஆம்" எஅன பதிலளித்தார் டால்ஜியட். முன்பு தொலைக்காட்சி நடிகர் ஷலீன் பானோட்டை அவர் மணந்தார். டால்ஜியட் கவுர் மற்றும் சித்தார்த் சுக்லா ஆகியோருக்கு 'படுக்கையறை பணி' ஒதுக்கப்பட்டது. ' பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, தனது மகன் ஜெய்தனுடன் சல்மானின் ஒரு பாடலுக்கு நடனமாடினார் டால்ஜியட்.

பின்னர் நடிகை அமீஷா படேலின் அசாத்திய நடனம் பிக் பாஸ் 13 பிரீமியரை மறக்கமுடியாத இரவாக மாற்றியது. போட்டியாளர்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளதாக கூறினார் அமீஷா. அவர் பராஸ் தொடங்கி மற்ற போட்டியாளர்களைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படுத்தினார். பிக் பாஸின் முதல் நாளின் 'முதல் செல்ஃபி'யை சல்மானும் அமீஷாவும் எடுத்தனர்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 13 வார நாட்களில் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பப்படும். இந்தாண்டு பிக் பாஸின் செட்டை லோனாவ்லாவிலிருந்து கோரேகான் பிலிம் சிட்டிக்கு மாற்றியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

Bigg Boss Salman Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment