பிக் பாஸ் சீசன் 3 புகழ் அபிராமி வெங்கடாச்சலம் புதிய தொழில் முனைவோராக மாறியுள்ளார். அபிராமி உடைகள் என்ற பிராண்டை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " அபிராமி என்பது பெயர் மட்டுமல்ல. அது தற்போது பிராண்டாக மாறியுள்ளது. அபிராமி உடைகளை அறிமுகப்படுத்துகிறேன். வாடிக்கையாளர்கள் நிச்சயம் பலனடைவார்கள்.எனது ரசிகர்கள் ஆதரவளிக்க் வேண்டும்" என்று பதிவிட்டார்.
பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் அபிராமி நடித்திருந்தார்.