ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாலா, பாராட்டிய ஆரி.. சபாஷ் சரியான போட்டி!

Bigg Boss 4 Tamil Review எவ்வளவு முட்டைகளை வேஸ்ட் பண்ணிடீங்க பிக் பாஸ்? இது பலரைத் தவறாக வழிநடத்தக்கூடும். கவனம்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Gaby Som review Day 58
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala

Bigg Boss 4 Tamil Review Day 58 : ‘விதிமுறைகளைத் தந்திரமாக மீறுவது எப்படி’ என்கிற தலைப்பில் ஓர் புத்தகத்தையே பிரத்தியேகமாக ப்ரின்ட் செய்கிற அளவிற்கு பாலாவிடம் தனித்திறமை உள்ளது. ஒரு விளையாட்டையாவது விதிமுறைகளோடு விளையாடியிருக்கலாம். என்றாலும் சுவாரஸ்யத்தில் ஒரு குறையும் வைப்பதில்லை. நாளுக்கு நாள் கேபியின் வெளிப்பாடும் இயல்பும் அதிகமான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. நேற்றைய எபிசோட் பற்றி பகிர்ந்துகொள்ள கன்டென்ட் எதுவுமில்லை என்றாலும் பாலா-ஆரியின் கால் சென்டர் டாஸ்க் பற்றி விவாதிப்போம் வாங்க.

ப்ரோமோவில் ஆஜீத் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அர்ச்சனாவின் பதில் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் தீவிரமாக டிவியை பார்த்துக்கொண்டிருந்த நமக்கு வழக்கம்போல அல்வா கொடுத்துவிட்டார் பிக் பாஸ். அர்ச்சனா – ஆஜீத்தின் மிக மொக்கையான உரையாடல்களை மட்டும் நமக்காக எடிட்டர் எபிசோடில் கட் செய்திருந்தார். ஏன் எடிட்டர் தம்பி? நாங்க என்ன பண்ணினோம் உங்களுக்கு! அடுத்தமுறையாவது குறைந்தபட்சம் ப்ரோமோவில் போடுவதையாவது முழுசாப் போடுங்க. ஒருவேளை ஏதாவது வில்லங்கமா பேசிருப்பாங்களோ! எடிட்டருக்குத்தான் வெளிச்சம்!

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Gaby Som review Day 58
Bigg Boss 4 Tamil Vijay Tv

அடுத்ததாக கேபி, சோமுக்கு அழைத்தார். இவர்களின் உரையாடல்களைப் பற்றி நமக்குத் தெரிந்ததுதான். ஆனால், ரம்யா மீதான சோம் சேகரின் ஈர்ப்பு, அவருடைய பதில்களிலேயே தெரிந்தது. ‘போதும் போதும் லிஸ்ட் பெருசாகிட்டே போகுது’ என்கிற அளவுக்கு ரம்யாவிடம் பிடித்த விஷயங்களைப் பற்றிக் கூறினார். நீங்க ஒரு தரமான 90’ஸ் கிட் என்பதை ப்ரூவ் செஞ்சிட்டிங்க சோம். ப்ரவுட் ஆஃப் யூ!

அடுத்ததாக நம்ம ஹீரோ பாலாவின் அழைப்பு. இந்த வாரம் நாமினேட் ஆகியிருக்கும் ஆரியை தெளிவாக டார்கெட் செய்திருந்தார் பாலா. ஆரியின் குறைகளை (பாலாவின் கண்களுக்குப்பட்ட) மட்டும் சொல்லிவிட்டு, அவற்றுக்கு பதில் எதுவும் கூறவிடாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டால், ‘எவ்வளவு பெரிய வில்லன் இந்த ஆரி, அவர் வீட்டிலேயே இருக்கக் கூடாது, முதலில் அவரை வெளியேற்றவேண்டும்’ என்று மக்கள் நினைப்பார்கள் என்ற மனக்கணக்கைச் சென்ற வாரமே போட்டு வைத்துவிட்டார் போல பாலா. எங்கே மறந்துவிடுவோமோ என்று குறிப்பெல்லாம் எடுத்து வந்திருந்தார். ஆனால், நீங்க எவ்வளவு தெளிவாக விளையாடினாலும், நாங்களும் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் பாலா ப்ரோ.

Bigg Boss Tamil 4 Promo aari, balaji murugadoss
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala

ஆதங்கத்தையெல்லாம் வெளியே கொட்டுவது இருக்கட்டும், இந்த டாஸ்க்கின் விதிமுறை என்னன்னு நீங்க மறந்துடீங்களா பாலா? வரைமுறைகளின்றி என்னவேண்டுமானாலும் கேட்கலாம், அதற்கு ஊழியர்கள் முறையான பதில் சொல்லவேண்டும் என்பதுதான் டாஸ்க். இங்கே கேள்வியும் கேட்கப்படவில்லை (பாலா சொன்னதெல்லாம் ஆதங்கமே!) பதிலும் வரவில்லை. சாரி, சொல்லவிடவில்லை. ஆனால், ஐந்து மதிப்பெண்கள் மட்டும் கொடுத்தாச்சு. இது பிக் பாஸ் வீடா இல்லை பாலா வீடா என்கிற கேள்வி மறுபடியும் எழுந்தது. இந்த தெலுங்கு பிக் பாஸில் விதிமுறைகளை திரும்பத்திரும்ப மீறியதற்காக ஒரு போட்டியாளரை நாகார்ஜுன் வார்னிங் செய்தது போல பாலா எப்போதும் விதிமுறைகளை மீறிக்கொண்டு இருப்பதால் கமலும் ஏதாவது பாலாவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தால் நன்றாக இருக்கும்!

அத்தனை கேள்விகளையும் எதிர்கொண்டு பதில் கூற முடியாமல் தடை செய்யப்பட்டாலும், சூழ்நிலையை மிக அழகாகவே கையாண்டார் ஆரி (சபாஷ் சரியான போட்டி). அதுமட்டுமா, பாலாவின் ஸ்ட்ராட்டஜியை பாராட்டவும் செய்தார். நீங்க நடத்துங்க ப்ரோ! இது உங்க ஸ்ட்ராட்டஜியா! பாலாவின் இத்தகைய செயல்கள் ஆரிக்கு மேலும் ரசிகர்களைச் சேர்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Rio Shivani Aajeeth review Day 57
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Shivani

என்னதான் சொல்லுங்க, பாலாவுக்கு பெர்ஃபெக்ட்டா ஜால்ரா அடிக்கிற ஒரே ஆள் ஷிவானிதான். அதனால்தான் எப்போதும் ஓட்டிக்கொண்டே இருக்கிறார். ஷிவானியை பாலா கண்டுகொள்ளவில்லை என்றால் மட்டுமே இருவருக்கும் வாக்குவாதம் வருமே தவிர, மற்ற விஷயங்களில் அல்ல. பார்த்து இருங்க ப்ரோ ஷிவானி கொஞ்சம் டேஞ்சர் ஜோன்ல இருக்காங்க! ஆனால், கேபி அனைவர்க்கும் ஃபேவரைட்டான போட்டியாளராக மாறிவருகிறார். பெரும்பாலான மக்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறாரே அதனால்தான் போல. இப்படியே இருந்தால் கேபி இறுதிநாள் வரை பயணிக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்ததாக முட்டை போட்டி. இந்த விளையாட்டை ஃபிரேம் செய்தவர் நிச்சயம் 90’ஸ் குழந்தையாகத்தான் இருக்கவேண்டும். அர்ச்சனா மீது மனதிலிருந்த வெறியெல்லாம் முட்டை உடைத்துத் தீர்த்துக்கொண்டார் அனிதா. தன் மனக்குறைகளைத் தீர்த்துக்கொள்ள முடியவில்லையே என்கிற விரக்தியில் சனம் சுற்றிக்கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. ஆனா, எவ்வளவு முட்டைகளை வேஸ்ட் பண்ணிடீங்க பிக் பாஸ்? இது பலரைத் தவறாக வழிநடத்தக்கூடும். கவனம்.

விறுவிறுப்பாக இன்றைக்காவது நகருமா என்கிற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டிருக்கிறது இந்த ரியாலிட்டி ஷோ. இன்னைக்கு எப்படியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv aari bala gaby som review day 58

Next Story
‘நா பாதி முகத்த தான் காட்டுவேன்னா எப்படி?’ ரியோவை திணற வைத்த அனிதாBigg Boss Tamil 4 Promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com