முட்டை உடைப்பது.. பருப்பில் அலட்சியம்.. இதெல்லாம் சரியா பிக் பாஸ்?

Bigg Boss 4 Tamil Day 84 Review இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது மக்களிடத்தில் நம்பிக்கையின்மையை அதிகரிக்கவே செய்கின்றன.

By: December 27, 2020, 10:41:04 AM

Bigg Boss 4 Tamil Review : அடடா! அர்ச்சனா வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க! அதைவிட எவ்வளவு வேஸ்ட் பண்ணுறாங்க! ஒரு வேளை கஞ்சிக்குக் கூட வழி இல்லாமல் வாழும் சில மக்களுக்கு மத்தியில் டாஸ்க் என்ற பெயரில் முட்டையை உடைத்து வீணடிப்பதும், தெரிந்தே பருப்பைக் கொட்டுவதும் என தேசிய தொலைக்காட்சியில் இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பாவது அதிர்ச்சியளிக்கிறது.

பருப்பு மற்றும் இதர அத்தியாவசிய பொருள்களின் மதிப்பறிந்து டாஸ்க் கொடுத்தால் நல்லது. அதிலும் தன் குடும்பத்தைப் பற்றிப் பேசியதற்காக அவ்வளவு கோபப்படும் அனிதா, பத்திரிகையாளராக இருந்துகொண்டு அலட்சியமாக பதிலளிப்பது சரியல்ல. அதிலும் அரசியலில் அழுத்தமான முத்திரை பதிக்கவேண்டுமென முனைப்போடு உழைத்துக்கொண்டிருக்கும் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது மக்களிடத்தில் நம்பிக்கையின்மையை அதிகரிக்கவே செய்கின்றன.

வார இறுதி வந்தால் மட்டும் பாலாவின் ஆட்டிடியூட் முழுவதுமாக மாறிவிடுகிறது. ‘பாலாவைவிட நல்ல குழந்தை இந்த உலகத்திலேயே இல்லை’ என்பதுபோல இருந்தது நேற்றைய பாலாவின் பாவனைகள். அந்நியனுக்கே டஃப் கொடுக்கிறார் என்று சொன்னாலும் மிகையாகாது. தன்னை ‘பாலா’ என்று கமல் அழைக்கவில்லையாம் ‘பாலாஜி’ என்றே கூப்பிடுகிறாராம். இதை அவ்வளவு பெரிய புகாராக வைத்துக்கொண்டிருந்த பாலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார் கமல். (என்ன செய்வது? இப்படிதான் முழுக்க முழுக்க சிறுபிள்ளைத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறது இந்த சீசன்!)

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Anita Bala Shivani Ramya review Day 78 Bigg Boss 4 Tamil Vijay Tv Anita

‘எனக்கு ஸ்பேஸ் கிடைக்கலை, கமல் சாரும் ஸ்பேஸ் கொடுக்க மாட்டிங்குறாரு’ எனப் புலம்பிக்கொண்டிருந்த அனிதா மீது, அவரிடம் பேசுவதற்கு என்றைக்குமே அனிதா ஸ்பேஸ் கொடுத்ததில்லை என்று ‘பளார்’ விமர்சனத்தைக் கொட்டினார் ஆரி. அதுமட்டுமா! தங்களின் நெகட்டிவ் முகமோ விமர்சனங்களோ வெளியே தெரியவே கூடாது என்பதில் அனைவரும் கான்ஷியஸாக இருக்கிறார்கள், அதனால் யாரும் தங்களின் தவறுகளை ஏற்றுக்கொள்ளமாட்டிங்குறார்கள் என்று நச்சென தன்னுடைய கருத்தைப் பதித்தார் ஆரி. மற்றவர்களின் தவறுகளை வெளிப்படையாகச் சொல்வதற்கும் தன் தவற்றைத் திருத்திக்கொள்வதற்கும் தயார் நிலையில் இருக்கும் ஆரியின் இந்த பண்புதான் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்த வாரம் அனிதாவின் வெளியேற்றம் இருக்கும் என எதிர்பார்ப்போடு பிக் பாஸ் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அனிதா வெளியேறிவிட்டால் பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும்? உங்கள் கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 4 tamil vijay tv kamal hassan aari bala anita review day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X