Advertisment

பிக் பாஸில் ஸ்பேஸ் கிடைக்காத அனிதா!

'மன்னிச்சிடுங்க' எஜமான் ஷிவானி ட்ரிகர் செய்ததால்தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன் என பல்ட்டி அடித்தார் சுச்சி. (யாரையும் நம்பவே முடில எஜமான்!)

author-image
priya ghana
New Update
Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Suchi Anita Shivani Day 42 review

Bigg Boss 4 Tamil Vijay Tv Anita

Bigg Boss 4 Tamil Day 42 Review : கலகல தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்து சீரியஸ் டிஸ்கஷனில் சென்றது நேற்றைய எபிசோட். ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்று சுற்றித் திரிந்த அனிதாவிற்குக் கமல் ஹாசனும் வாயடைத்து உட்கார வைத்துவிட்டார். இனி அனிதாவின் நிலை என்னவாக இருக்குமோ! அதெல்லாம் இருக்கட்டும்.. 'வீக்கெண்டில் கமல் ஒரு வழி பண்ணிடுவாரு' என்று நாம் நினைத்து வைத்திருக்கும் விஷயங்களெல்லாம் ஒன்றுமே இல்லாமல் போவதுதான் டிஸ்அப்பாயின்ட்மென்ட்.

Advertisment

லெமன் பிரச்சினையை விவாதித்துக்கொண்டிருந்தவர்கள், அப்படி என்னம்மா வீட்டில் பார்ஷியாலிட்டி பண்ணுறாங்க எனக் கமல் கேட்க, அதற்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, இப்போது மைண்ட் க்ளியர் ஆகிடுச்சுப்பா எனக்கூறி அமர்ந்தார் சுச்சி. இவர் பாம்பு மாத்திரை அல்ல புஸ்வானம்.

'அதெப்படி சாப்பாட்டைக் கொட்டியது தாமாக 'இருக்கலாம்' என்று சொல்ல முடியும். கொட்டியதுகூடவா நினைவில் இருக்காது. ஆமான்னா ஆமா, இல்லைனா இல்ல. இதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய சண்டை!' என நம் கேள்விகளை அப்படியே சனம் ஷெட்டியிடம் கமல் கேட்பார் என்று ப்ரோமோவை பார்த்து சில்லறைகளைச் சிதறிவிட்டோம். ஆனால், அதிலும் நம்மை ஏமாற்றிவிட்டார். குழப்பத்தைத் தீர்த்து வைப்பார் என்று நினைத்தால், இன்னும் குழப்பிவிட்டுச் சென்றுவிட்டார். நல்லது சாமி!

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Suchi Anita Shivani Day 42 review Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam

நாம் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்ததைப்போல் சனம் ஷெட்டிக்கு ஜோடியாக பாலாவை போடவில்லை என்ற கோபத்தால் என்னவோ சிடுசிடுவென இருந்திருப்பார் என்பதற்கு ஏற்றதுபோல, சிவாஜி கணேசன் - சாவித்திரி இணைந்து நடித்த 'பாசமலர்' மற்றும் 'நவராத்திரி' ஆகிய இரண்டு படங்களுக்குமான வேற்றுமையை எடுத்துக்கூறினார் கமல். நடிப்புனு வந்துட்டா எல்லா கதாபாத்திரத்தையும் எடுத்து நடிக்கணும் என்ற சிறிய பன்ச்சையும் சனம் ஷெட்டிக்கு கொடுத்தார் கமல்.

அடுத்ததாக பிக் பாஸ் முதல் நாள் அன்று ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட செடிகளைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார் கமல். 'என் செடி செத்துப்போச்சு' என்று  சரண்டரானார் பாலா. ஆனால், செடிகளை நட்டு வைத்து கின்னஸ் சாதனைப் படைத்த ஆரி, வீட்டிற்குள் ஒரு செடியை ஒழுங்காக வளர்க்காமல் இருந்தது ஏமாற்றமே! என்றாலும் வீட்டில் இருக்கும் அனைத்துச் செடிகளையும் ரம்யா பார்த்துக்கொள்வதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

எப்போடா லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் பற்றி கேட்பாரு என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் வந்தது. 'ஹானஸ்டி', 'ஹானஸ்ட்'க்குமான வித்தியாசம் பற்றி கேட்கத் தொடங்கி, சுச்சி வசமாக மாட்டப்போகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த நமக்கு, ஷிவானிதான் மெயின் கலப்ரிட் என்ற புதிய குண்டை தூக்கிப்போட்டார் சுச்சித்ரா. (இதென்ன புது கதை!). 'மன்னிச்சிடுங்க' எஜமான் ஷிவானி ட்ரிகர் செய்ததால்தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன் என பல்ட்டி அடித்தார் சுச்சி. (யாரையும் நம்பவே முடில எஜமான்!)

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Suchi Anita Shivani Day 42 review Bigg Boss 4 Tamil Vijay Tv Shivani

கேப்டன்சி பற்றிய ஃபீட்பேக் கேட்கத் தொடங்கியதும் போதும், ஆரி சும்மா பொங்கிப் பொங்கி தன் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தார் ஆரி. போதும் போதும் லிஸ்ட் போயிட்டே இருக்கு என்று கூறாத குறைதான். நீங்க ரொம்ப நல்லாவே பண்ணீங்க ப்ரோ, சிட் டவுன் என்றுகூறி வாயடைத்தார் கமல். இதனைத் தொடர்ந்து ரியோ, அனிதா விஷத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தவர், அனிதாவின் நான்-ஸ்டாப் பேச்சை சிவப்பு கோடி காட்டி ஆஃப் செய்தார் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து 'எனக்குக் கமல் சார் ஸ்பேஸ் கொடுக்கவே இல்லைடா' என சனம் ஷெட்டியிடம் குமுறிக்கொண்டிருந்தார் அனிதா! அதற்கு சனம் ஷெட்டியின் விளக்கம் சிறப்பு. ஆனால், அதெல்லாம் அனிதா காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. நிச்சயம் இந்த வாரம் கெட் அவுட் ஆகப்போவது அனிதாவாகத்தான் இருக்கும். அவர் எந்த இமேஜ் கான்ஷியசில் இருக்கிறாரோ, அது டோட்டல் டேமேஜ் என்பதிற் விரைவில் தெரிந்துகொள்வார்.

தன்னை யார் நாமினேட் செய்திருப்பார்கள் என்ற யூகங்களைச் சொல்லுங்கள் என்றதற்கு, தான யாரை நாமினேட் செய்தார் என்ற நிஷாவின் முந்திரிக்கொட்டை பதில் குபீர் சிரிப்பையே வரவைத்தது. என்றாலும், அனைவரின் யூகங்களும் ஏறத்தாழ சரியாகவே இருந்தன. இன்றைக்கு நாமினேஷன் நாள். தற்போது வரை அனிதாவுக்குத்தான் அதிகப்படியான எதிர்ப்புகள் வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியையும் உள்ளன. பார்ப்போம் ஏதாவது சுவாரசியமாக நடைபெறுமா என்று!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Kamal Haasan Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment