Bigg Boss 4 Tamil Review Day 87 : பெர்ஃபாமன்ஸ் பண்ணாலும் பண்ணலைனாலும் இந்த சீசனில் ஆரி தினந்தோறும் மக்கள் மனதைக் கவர்ந்துகொண்டே இருக்கிறார். நேற்றைய எபிசோடில் ரியோ, கேபி மற்றும் சோம் மூவரையும் ஃப்ரீஸ் செய்தபோது, கேபியின்மேல் வேறொரு துணியைப் போர்த்தி கேபி அணிந்திருந்த க்ராப் டாப்பினால் தெரியும் அங்கங்களை ஆரி மறைத்த விதத்தினால், தமிழ்நாட்டு மக்கள் மனதைக் கொள்ளை அடித்துவிட்டார் என்றே சொல்லலாம். கேபியை மட்டும் தனியாகக் காட்டக்கூடாது என்பதற்காக சோமிற்கும் வேறொரு துணியை அணிவித்த விதம் அருமை அருமை! சமூக வலைத்தளங்களைத் திறந்தாலே ஆரியை போற்றும் காணொளிகளை அதிக எண்ணிக்கையில் காணமுடிகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு மாஸ் ஃபாலோயர்களை சம்பாதித்து இருக்கிறார் ஆரி. இவ்வளவு நாள் எங்க போயிருந்தீங்க பாஸு!
'என் ஜன்னல் வந்த காற்றே..' பாடலோடு ஆரம்பமான நேற்றைய எபிசோட், ஆரி மற்றும் பாலாவின் ஃப்ரீஸ் டாஸ்க்கோடு ஆரம்பமானது. தன் 60-க்கும் மேற்பட்ட கண்களால் கண்காணித்துக்கொண்டிருந்த பிக் பாஸ் தக்க சமயம் பார்த்து ஆரி மற்றும் பாலாவை இணைக்கும் விதமாக ஃப்ரீஸ் செய்து அழகு பார்த்தார். அதற்கு ஏற்றதுபோல் ரம்யா கொடுத்த கமென்ட்டரி வேற லெவல் போங்க. மீம் கன்டென்ட் அனைத்தையும் நீங்களே பேசிட்டா நாங்க எதைத்தான் பேசுறது! ஆனாலும், பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. சண்டை கோழிகளை கொஞ்சும்கொழியாக மாற்றிய பிக் பாஸுக்கு பாராட்டுகள்.
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala
'உன்கூடவே பொறக்கணும்..' பாடல் ஒளிபரப்பாக, துபாயிலிருந்து தரையிறங்கிய ரம்யாவின் சகோதரர் வீட்டிற்குள் வந்தார். அவர் வரும் நேரம் வீட்டில் இருக்கும் அனைவரும் ஃப்ரீஸாகி இருக்க, ரம்யாவிடம் 'என் தலைவன் எங்கே' என ஆரியை கேட்ட விதம் டாப் நாட்ச். வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரையும் அவர்களின் 'பன்ச் டயலாக்' வைத்தே கலைத்தார் ரம்யாவின் அன்பு பிரதர். அதிலும் ஆஜித்திடம் சென்று, 'நான்தான் ஒரிஜினல் பிரதர்' என்று சொன்னவிதம், 'அது நீதானப்பா' என்று மைண்ட் வாய்ஸால் பேச வைத்தது. அப்படியே போகிற போக்கில் பாலாவைப் பார்த்து 'வழக்கம்போல மைக் போடமாட்டாரு' என்று கலாய்த்துவிட்டுச் சென்றார். பேசாம இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தார்கள் எல்லோரும் பிக் பாஸ் போட்டியாளர்களாக மாற்றிவிடலாம். ஒவ்வொருவரும் அவ்வளவு கன்டென்ட் கொடுக்கிறார்கள்.
ரம்யாவின் அம்மா சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்க, ரம்யா மேலும் துள்ளிக்குதித்தார். அவருடைய அம்மா ரம்யாவிற்கு மேல் தந்திரமாக இருப்பர் போல. 'வீட்டிற்குள்ளேயே கடுமையான போட்டியாளர் நீதான். ஆனா, வெளில வந்தா ஃபீல் பண்ணக்கூடாது; என்று பலமுறை தன் சகோதரன் சொல்வதை கேட்ட ரம்யாவின் முகமெல்லாம் கேள்விக்குறிகள். ஆனால், நிச்சயம் ரம்யா ஃபைனல்ஸ வரை செல்வார் என்பதில் எந்தவித டவுட்டும் இல்லை. இடையில் ரம்யாவின் சகோதரர் சோம் சேகரை பார்த்து, 'மச்சான்; என்று கூப்பிட விதம்- சொல்வதற்கு வார்த்தையே இல்லை! உப்புமா ஃபேமிலி என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபித்துக்கொண்டே இருந்தனர். ஆனால், பாசிட்டிவ் உணர்வையே கொடுத்தது ரம்யா குடும்பத்தினரின் என்ட்ரி. என்றாலும் இந்த பாலாவுக்கு என்ன பிரச்சனை என்றுதான் புரியவில்லை. யாருடைய குடும்பத்தினர் வந்தாலும், அவர்கள் பேசுவதை ஒட்டுகேட்டுக்கொண்டே இருக்கிறார். அவ்வளவு ஆர்வம்! ஹ்ம்ம்..
Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Family
யாரும் யார் பின்னாடியும் பேசாதீங்க என்கிற பொது டிப்ஸ் கொடுத்துவிட்டுச் சென்றனர் ரம்யா குடும்பத்தினர். அடுத்ததாக, ரியோவின் மனைவி என்ட்ரி. கண்ணீரோடு கரைந்தது அவர்களின் நேரம். ரம்யாவை தூக்குவதை ஹயிலைட்டாக கூறியது அதிகப்படியான சிரிப்பொலியை ஏற்படுத்தியது. மிகவும் எமோஷனல் மொமென்ட்டாக இருந்தது ரியோ மற்றும் அவருடைய மனைவியின் தருணங்கள். 'கப் வின் பண்ணலைனா கூட பரவாயில்ல, சந்தோஷமா இரு' என்று ஸ்ருதி சொன்ன விதம் உண்மையான அன்பின் வெளிப்பாடு.
'ரெட்டைக் கதிரே..' பாடல் இசைக்க, மெல்ல வீட்டிற்குள் நுழைந்தார் சோமின் சகோதரர். எல்லோருடைய இன்ட்ரோவையும் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்தார். சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டுச் சென்றார் சோமின் சகோதரர். இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அனைத்து குடும்பத்தினரும் ஆரியையே முதன்மையாகத் தேடினார்கள். இது வீட்டிற்குள் இருக்கும் பலருக்கும் பல சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆரியின் குடும்பத்தினர் என்ட்ரிக்கு அனைவரும் வெயிட்டிங்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"