Bigg Boss 4 Tamil Review: உணவு பற்றிய உரையாடலோடு ஆரம்பமானது கமல் தொகுத்து வழங்கிய நேற்றைய பிக் பாஸ். கடந்த சீசன்களில் விளம்பர இடைவேளையின்போது மட்டுமே அரசியல் 'பன்ச்'களை அல்லி வீசுவார் கமல். ஆனால், இம்முறை ஒவ்வொரு வரியிலும் அரசியல் சாயல் இருக்கிறது. 'பிக் பாஸ் நிகழ்ச்சியா அல்லது அரசியல் பிரச்சார களமா' என்ற சந்தேகமும் அவ்வப்போது எழுகிறது.
ஒரு வழியாக முதல் வாரம் கடந்துவிட்டது. இந்த வாரம் யாரும் எவிக்ட்டாகவில்லை. ஆனால், ஒவ்வொருவரின் உண்மை முகமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இவ்வளவு நாளாக மிகவும் பொறுமையுடனும், கனிவுடனும் முக்கியமாக மிகவும் முதிர்ந்த மனநிலையில் எல்லோருடனும் பழகிக்கொண்டிருந்த ஆரி, வீட்டின் கடைக்குட்டி சிங்கம் ஆஜீத்திடம் பொறுமையை இழந்துவிட்டார். இருவரும் மாறி மாறி ஹார்ட் பிரேக் கொடுத்த விதம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது.
Bigg Boss 4 Tamil Aari
இவர்கள் மட்டுமல்ல, ஏராளமானவர்கள் மனநிலையும் தனிப்பட்ட வெறுப்பின் காரணமாகவே இருந்தது. அனிதா-சுரேஷ், ரேகா-சுரேஷ், சனம்-பாலா, சனம்-சம்யுக்தா என இவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆனாலும் இந்த எபிசோடில் மிகவும் ஸ்மார்ட்டாக விளையாடியது அண்ணன் வேல்முருகன்தான். சிரித்துக்கொண்டே சமாளிப்பது எப்படி, அதிலும் யாரையும் புண்படுத்தாமல் எஸ்கேப் ஆவது எப்படி போன்ற வித்தைகள் அண்ணனிடம் ஏராளமாக இருக்கும்போல. ஆனால், சிறப்பாகவே சூழ்நிலைகளைக் கையாளுகிறார் வேல்முருகன்.
அனிதா-சுரேஷ் பிரச்சினையைத் தொடர்ந்து பாலா-சனம் பிரச்சனை தற்போது வீட்டின் 'ஹாட் டாப்பிக்காக' உள்ளது. இந்த விஷயத்தில் வீட்டின் மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஒருதலை பட்சமாகப் பாலாவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால், கமல் அதனைச் சுட்டிக்காட்டிய விதம் அருமை. இருப்பினும் பாலா தன்னைத் திருத்திக்கொண்டதாகத் தெரியவில்லை. தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற தொனியிலேயே இறுதி வரை இருக்கிறார்.
Bigg Boss 4 Sanam Shetty
முதல் நாளிலிருந்து 'சனம் நடிக்கிறார்' என்ற முத்திரையைச் சுமந்துகொண்டிருப்பவரின் பக்கத்திலிருந்து ஒரு ஆதரவு வோட் கூட வராதது, முதலில் வீட்டை விட்டு வெளியேறுவது சனமாக இருக்கலாம் என்றே தோன்றவைக்கிறது. இருப்பினும் முடிவுகள் எப்படிவேண்டுமானாலும் மாறுமே!
'போட்டியே இல்லாமல் அதிகாரத்திற்கு வருபவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பார்கள்' என்று ரம்யாவை குறிவைத்துக் கூறியது உண்மையில் அவரைத்தான் குறிப்பிடுகிறாரா! (ஒருவேளை அப்படி இருக்குமோ!) அதிகப்படியான ஹார்ட் பிரேக்குகளை வாங்கிய சுரேஷ், ரேகா, ஷிவானி ஆகிய மூவரிலிருந்து, அதிக வாக்குகளைப் பெற்று இந்த வாரத்தின் தலைவராக சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரேகா, அனிதா, சனம் என்று சுரேஷின் 'வேட்டையாடும் நேம் லிஸ்ட்' நீண்டுகொண்டே போகிறது. ஏற்கெனவே, 'சண்டைபோடுங்க சண்டைபோடுங்க' என சீண்டிக்கொண்டிருக்கும் சுரேஷ் தலைமையிலான இந்த வாரம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது.
Bigg Boss tamil Suresh Chakravarthy
இப்படியொரு அக்கா நமக்கில்லையே என்று ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் பொறாமைப் படுகிற அளவிற்கு ரியோ-நிஷா பாசக்கதையைப் பற்றிக் கூறாதவர்கள் இல்லை. அதிகப்படியான ஹார்ட்ஸ்களை நேற்று அடுக்கினார் நிஷா. ரியோவின் குரல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்க தொடங்கியிருக்கிறது. அனிதா மிகவும் அடக்கியே வாசிக்கிறார். ஆனால், மனதில் நினைப்பது அனைத்தும் அவருடைய 'ஃபேஸ் ரியாக்ஷன்' காட்டிக்கொடுத்துவிடுகிறது.
இன்னும் ஆஜீத், ஷிவானி, கேபி, சம்யுக்தா உள்ளிட்டவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எப்போதும் சண்டைகள், மனஸ்தாபங்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் தாமதமாகவே தொடங்கும்.ஆனால், இம்முறை எல்லாமே ஃபாஸ்ட். இந்த வாரம் நிச்சயம் எலிமினேஷன் இருப்பதால், சண்டைகளின் ஆழம் அதிகரிக்கக்கூடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"