கேட்டாலும் தப்பு, கேட்காமல் இருந்தாலும் தப்பு.. முந்திரி சிஸ்டர்களின் டார்ச்சர்!

அப்பொழுதாவது தன் பேச்சை பாலா கேட்டிருக்கலாமே என்ற தவிப்பாகக்கூட இருந்திருக்கலாம்... ஹ்ம்ம்.. சனமுக்குதான் வெளிச்சம்!

By: November 11, 2020, 11:52:39 AM

Bigg Boss 4 Tamil Review Day 37 : இந்த வாரம் எலிமினேஷன் இல்லையெனச் சொன்னதும் போதும், அனிதா, சனம் ஷெட்டி தங்களின் கேமை விளையாட ஆரம்பித்துவிட்டனர் (நம்மை கடுப்பேத்துவதுதான்). இவர்கள் இருவருக்கும் நல்லது சொன்னாலும் பிரச்சனை, ஒதுங்கிப்போனாலும் பிரச்சினை. ரசிக்கும்படியான கன்டென்ட் கொடுக்கிறார்களா என்று பார்த்தால், அதுவுமில்லை. கடுப்புதான் வருகிறது. நல்ல நேரம் பார்த்து ‘நோ எலிமினேஷன்’ சொன்னீங்க போங்க, வீட்டுக்குள்ள இருக்கிறவங்க நல்லா விளையாடுறாங்களோ இல்லையோ மக்களை வைத்து நீங்க நல்லாவே விளையாடுறீங்க பாஸு.

‘கேட்டா கொடுக்குற பூமி இது..’ (ஓஹோ!) பாடலோடு ஆரம்பமான முப்பத்தி ஏழாம் நாள், நேரடியாக ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ டாஸ்க்கிற்கு கூட்டிச்சென்றது. ‘நீங்களா எதுவும் பண்ண மாட்டிங்குறீங்க, நானே பண்ணுறேன்’ என நினைத்த பிக் பாஸ், ரம்யா – சோம் சேகரை திருடும் தம்பதியினராக்கி கோர்த்துவிட்டார். ஆரம்பத்தில் இருந்தே சைடு கேப்பில் சிந்து பாடும் சோம், இம்முறை ‘டார்லிங்’ எனக்கூறி ரம்யாவை வெட்கப்படவும் வைத்துவிட்டார் (நடக்கட்டும் நடக்கட்டும்).

Bigg Boss Tamil 4 Promo Bigg Boss 4 Tamil Vijay Tv

என்னதான் சொல்லுங்க நம்ம ஆராய்ச்சியாளர்கள் செம்ம ‘ஃபன்’ தம்பதியினர். அட! நம்ம ரியோ மற்றும் நிஷாதான். எத்தனையோ துறைகள் இருக்கும்போது, அதென்ன ஆராய்ச்சியாளர்கள்? இதில் ஏதாவது ட்விஸ்ட் இருக்குமோ! என்னவோ!! தன் தாயை சந்தோஷப்படுத்துவதற்காக மகள் நிஷா பாடிய பாடல் அருமை. வேல்முருகன் இல்லாத குறையைத் தீர்த்து வைத்தார்.

ஆரி, சுச்சியை இணைத்து வேற லெவல் பெர்ஃபாமன்ஸ் செய்தார் பிபி. அதிலும் அழகாக இருக்கும் என நினைத்து சுச்சி பேசிய ஆங்கில-தமிழை கேட்கமுடியவில்லை. வெரி சாரி சுச்சி! ஆனால், அவ்வப்போது சுச்சி காணாமல் போய்விடுகிறார். அவர் எங்கு செல்கிறார் என்பதை தெரிந்துகொள்ள கேமராக்கள் பத்தாது, பூதக்கண்ணாடிதான் தேவை. இவர்களுடைய மகனாக ஆஜீத். அவருக்கு ஷிவானி மேல் ஈர்ப்பு. இதற்கு தடையாக இருப்பது ஷிவானியின் அண்ணன் பாலா (ஓ மை காட்!). இந்த மாறுபட்ட கனெக்ஷன் ஏன் என்பதுதான் புரியவில்லை. என்றாலும், அண்ணன்-தங்கை பிணைப்பில்தான் பாலா-ஷிவானி இருவரும் முன்பைவிட இணைபிரியாமல் இருந்தனர். என்ன ஒரு பாசம்!

‘சொல்வதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ ரேஞ்சில் வீட்டில் சுற்றிக்கிடந்த ரமேஷுக்கு, இனி சனம் சொல்வதை கேட்பதையே டாஸ்க்காக வைத்துவிட்டார். மனைவி சொல்லே மந்திரம் என்ற கேரக்டரில் ரமேஷ். இதில் ரமேஷின் கதாபாத்திரம் சனம் ஷெட்டியை சார்ந்து இருப்பது. ஆனால், சனம் ஷெட்டிக்கு என்ன கோவமோ தெரியவில்லை, சிடுசிடுவென இருந்தார். பாலாவை தன் மகனாகப் போட்ட கோவமா அல்லது கணவனாக போடவில்லை என்ற வருத்தமா என்பது தெரியவில்லை. அப்பொழுதாவது தன் பேச்சை பாலா கேட்டிருக்கலாமே என்ற தவிப்பாகக்கூட இருந்திருக்கலாம்… ஹ்ம்ம்.. சனமுக்குதான் வெளிச்சம்! ஆனால், இதனால் ரமேஷ் ஸ்கோரும் அடிவாங்கியதுதான் பரிதாபம்!

Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam Anita Bala Aari Archana Day 37 review Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam Shetty

பாலா தன்னோடு விளையாடவில்லை என்று ரமேஷ் மற்றும் ஆஜித்தை சனம் டீலில் விடுவதெல்லாம் ரொம்ப ஓவர். அந்தக் கோவத்தை ஆரியிடம் கொட்டித் தீர்த்ததும் கடுப்பின் உச்சம். ஆரி தெளிவாக எடுத்துக்கூறிய அட்வைஸையும் உதறிவிட்டார் சனம். ஒரு ஃப்ளோவில் ‘எனக்கு என்ன 6th சென்ஸா இருக்கு?’ (அப்போ இல்லையா?) என சனம் கேட்டது, குபீர் சிரிப்பைத்தான் வரவைத்தது. இதையெல்லாம் கேட்க மாட்டிங்களா பிபி! ஆரியை எதிர்த்து சனம் வந்ததும், சம்யுக்தாவின் முகத்தில் என்ன ஒரு ஆனந்தம்! அடடே!

அதுகூட பரவாயில்லை, ‘நல்லா இருக்கியா?’ என யாரவது கேட்டால், ‘ஏன் நான் நல்லா இருக்க கூடாதா ?’ பாணியிலேயே பதில் சொன்னால், யாருதான் நெருங்கி வருவார்கள்? அனிதாவைத்தான் சொல்லுறேன்! ஆனால், ரியோ ஏன் மறுபடி மறுபடி அனிதாவிடம் வாங்கிக்கொள்கிறார் என்பதும் புரியவில்லை. இந்த முந்திரி சகோதரிகளை (சனம் – அனிதா) அவர்களாகவே ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு வாதாடுவதற்கெல்லாம் பலியாவது நாம்தான். கொஞ்சம் நாளாகவே நிஷாவின் ஆட்டம் அதிகமாகதான் இருக்கிறது. ஆனால், நியாயமாகவும் உள்ளது. இதே வழியில் சென்றால் சிறப்பு. என்ன பிக் பாஸ், நிஷாவுக்கு ஸ்க்ரிப்ட் ஹெவியோ!

பாலா,ஷிவானி மற்றும் கேபி இணைந்து சின்சியராக போட்டுக்கொண்டிருந்த பிளானை தன் அம்மா ரம்யாவோடு பகிர்ந்துகொண்டார் செல்ல மகள் கேபி. ஆனால், இத்தனை கலவரத்துக்கும் இடையில் நம்ம சூப்பர்கூல் அப்பா திருடன் சோம், பத்திரத்தை பத்திரமாக திருடினார். இப்போதுதான் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் போல. வெல்டன் சோம். ஆனால், அனைவரின் சந்தேகப் பார்வையும் பாலாவின் பக்கம்தான் திரும்பியது. என்ன ஒரு நம்பிக்கை!

பத்திரத்தைத் திருடியது சோம்தான் என்பதை எப்படி கண்டுபிடிக்கப்போகிறார்கள் என பார்க்கலாம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 4 tamil vijay tv sanam anita bala aari archana day 37 review

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X