scorecardresearch

ஷிவானி கடுமையான போட்டியாளரா! கன்டென்ட் எங்கே காணும்?

Bigg Boss 4 tamil review நிஷா -ரமேஷ் உரையாடல். சொல்வதற்கு பெருசாக ஏதுமில்லை. கடந்துபோவோம்!

ஷிவானி கடுமையான போட்டியாளரா! கன்டென்ட் எங்கே காணும்?
Bigg Boss 4 Tamil Vijay Tv Shivani

Bigg Boss 4 Tamil Review Day 59 : ப்ரோமோக்களில் காட்டப்பட்ட அதிரடி விவாதங்களும் பாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் அனிதா-ரியோவின் சண்டையினால் ஒளிபரப்பவில்லை. இதெல்லாம் பாவம் மை சன். இப்படி ஏமாத்தலாமா? ‘ஜித்து ஜில்லாடி..’ பாடலோடு ஆரம்பமான நாளில் சில ‘ஆச்சரியம் ஆனால் உண்மை’ நிகழ்வுகளெல்லாம் நடைபெற்றது.

காலையிலேயே சோம் சேகரின் ‘குமார்’ டாஸ்க். என்னடா இது ரொம்ப மொக்கையா இருக்கு. இதை ஏன் போடுறாங்க என நினைத்துக்கொண்டிருந்தால், ‘பாஸி குமாரினால்’ சண்டை வந்தது. ‘ஏம்மா ‘பாஸி’னு சொன்னது ஒரு குத்தமாம்மா?’ என்கிற அளவுக்கு அந்த வார்த்தையை வைத்தே நேற்றைய நாளை கடந்து வந்தார் அர்ச்சனா. அவருக்குப் பக்க பலமாக நிஷா. பாவம் லவ் பெட் பேர்ட்ஸ்களுக்கு வந்த நிலைமை. ஆனால், நம்ம ‘லேட் ரியாக்ஷன்’ சனம், வழக்கம்போல ‘என்னை மட்டும் ஏன் மசாஜ் செய்ய சொன்னீங்க’ என சோமிடம் விவாதித்துக்கொண்டிருந்தார். சண்டைபோடாமல் ரொம்ப போர் அடிச்சிருக்கும்போல!

இந்தக் கலவரத்துல தெரியாம மாட்டிக்கிட்டாங்க கேபி. தன் ஒரே நண்பரான ஆஜீத்திடம் புலம்பிக்கொண்டிருந்தார். மறுமுனையில் சாதாரணமாக சொல்கிற வார்த்தைகள்கூட எந்த அளவிற்கு தாக்கத்தைக் கொடுக்கும் என்பதை புரிஞ்சிக்கிட்டோம் என்று தீவிர டிஸ்கஷனில் ஈடுபட்டிருந்தனர் நிஷாவும் அர்ச்சனாவும். அதுமட்டுமா, பாலா மற்றும் அனிதா ஒரு ஓரத்தில் ஜித்தன் ரமேஷ் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். இப்படியே பேசிக்கொண்டிருந்தால் எப்படி! ஏதாவது கன்டென்ட் கொடுங்க என்ற மைண்ட் வாய்ஸ் நம்மை டிஸ்டர்ப் செய்யாமல் இல்லை.

Bigg Boss 4 Tamil Vijay Tv Shivani Ramya Archana Nisha Anita review Day 59
Bigg Boss 4 Tamil Vijay Tv Anita

அடுத்ததாக கால் சென்டர் டாஸ்க். இந்த அறுபது நாள்களில் நேற்றுதான் ஷிவானியின் நீண்ட உரையாடல்களை முடிந்தது. ஆனால், அத்தனையும் படுமொக்கை. எல்லாம் ரம்யாவின் ஆசீர்வாதம் போல. எந்த நம்பிக்கையில் ஷிவானி இறுதிச்சுற்று வரை செல்வார் என்று அனைவரும் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க மக்களே! நாலு மணி ஷிவானி வெளியில் இருந்திருந்தால் இந்நேரம் அறுபது கன்டென்ட்டுகள் கிடைத்திருக்கும். சிம்ப்ளி வேஸ்ட்டா போச்சே!

அடுப்படியாக அனிதாவின் அழைப்பு. எப்பா! முடியலடா சாமி ரகம். பாலா ஆரியை பேசவிடாமல் மடக்கினார், அனிதா ரியோவை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்தார். அவ்வளவுதான் வித்தியாசம். பார்ப்பதற்கு பக்கா பழிவாங்கும் நிகழ்ச்சியாகவே தெரிந்தது. வார்த்தைக்கு முந்நூறு தடவை ‘கேமராக்காக பண்ணீங்களா?’, ரசிகர்களுக்காக பண்ணீங்களா?’ என கேட்கும் அனிதாவிற்கு ஏன் அப்படி முதலில் நினைக்கத் தோன்றியது? இந்த வீட்டிலேயே எது ப்ரோமோ கன்டென்ட், எது மெயின் கன்டென்ட் என துல்லியமாக கணித்து மற்றவர்களிடம் தீவிரமாக விவாட்ஜிக்கும் ஒரே நபர் அனிதாதான். அவரே இப்படிக்கு கேட்பதுதான் வேடிக்கை. அனிதா குமாரு பார்த்து இருங்க. நாமினேஷன்ல இருக்கீங்க. வெளில வந்தீங்க அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க!

அடுத்தபடியாக நிஷா -ரமேஷ் உரையாடல். சொல்வதற்கு பெருசாக ஏதுமில்லை. கடந்துபோவோம்! மெயின் சம்பவங்கள் இன்று நடைபெறும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 4 tamil vijay tv shivani ramya archana nisha anita review day 59

Best of Express