‘கட்’டிங்கில் ஏன் இவ்வளவு பிரச்சினை.. சிங்கிளாக விளையாடும் பிக் பாஸ்

ஏதோ கோவா பீச்சில் சுண்டல் வாங்கி சாப்பிடச் செல்வதுபோல் உடை அணிந்து வந்திருந்தார் பாலா. சொன்னதை செஞ்சாதான் தம்பி நல்லவிதமா அங்கீகாரம் கிடைக்கும். பார்த்து!

By: October 23, 2020, 12:31:44 PM

Bigg Boss 4 Tamil Review Day 18: அரக்கர்களின் அட்ராசிட்டிகளைப்போல நேற்றைய தினமும் கன்டென்ட் நாளாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்த நமக்கு, வழக்கம்போல ஏமாற்றமே. ப்ரோமோவை காட்டி ஏமாற்றிவிட்டார் பிக் பாஸ். குறைந்தபட்சம் ப்ரோமோவில் வரும் கன்டென்ட்டையாவது கட் செய்யாமல் போடலாமே! ‘கட்டிங்கில்’ பிரச்சனையோ! சரி விடுங்க.. ‘டண்டணக்கா..’ பாடலோடு ஆரம்பமான பதினெட்டாம் நாள் எப்படி புஸ்வானம் போலப் போனது என்பதைப் பார்க்கலாம் வாங்க.

‘இந்த பாலா பய ஃப்ளோல சொல்லிருப்பானோ! ஆனாலும் என்னைப்போய் அப்படி சொல்லிட்டானே’ என முந்தைய தினம் ‘மூளை இருக்கா’ என்று பாலா கேட்ட நிகழ்வை நினைத்து ஃபீல் பண்ணிக்கொண்டிருந்தார் சுரேஷ். இன்றைய நாளின் டாஸ்க், ‘பட்டிமன்றம்’. சாதாரண நாள்களிலேயே நம் இன மக்களுக்கு (உங்களை சொல்லல பிக் பாஸ்) ரூல்ஸ் எதுவும் புரியாது. பட்டிமன்ற தலைப்பையும் ஒரு சிலரைத் தவிர யாரும் புரிந்துகொள்ளவில்லை. சிலர் பேசியதையும் பிக் பாஸ் காட்டவுமில்லை(பேசியவர்களுடைய கன்டென்ட்டும் சுமார்தான். நல்லவேளை கட் செஞ்சுட்டார் எடிட்டர்).

Bigg Boss 4 Tamil Vijay tv Suresh Aari Ramya Pandian Kamal hasan Sanam Bala Review Day 18 Bigg Boss 4 Tamil vijay Tv Rio, Ramya and Shivani

‘பிக் பாஸ் வீடு ஆனந்த களமா? போட்டிக்களமா?’ என்பதுதான் தலைப்பு. ஆனால், நம்மை ரணகளத்தில்தான் தள்ளினார்கள் போட்டியாளர்கள். பட்டிமன்றத்திற்கான சரியான உடையில் கலந்துகொள்ளவேண்டும் என்பதுதான் ‘பின்குறிப்பு’. ஆனால், ஏதோ கோவா பீச்சில் சுண்டல் வாங்கி சாப்பிடச் செல்வதுபோல் உடை அணிந்து வந்திருந்தார் பாலா. சொன்னதை செஞ்சாதான் தம்பி நல்லவிதமா அங்கீகாரம் கிடைக்கும். ஏற்கெனவே நிறைய ஹேட்டர்ஸ் வெளியில் வெயிட்டிங். பார்த்து!

சோம், பாலா, ரம்யா, அனிதா என இவர்களின் பாயின்ட்டுக்கான கன்டென்ட் ஆஜீத் மட்டுமே. ஆனால், அந்த ஆஜீத் பேசியதை போட்டுக்காட்டவேயில்லையே பிக் பாஸ். அந்தத் தம்பி பேசுகிறதை பார்க்கலாம்னு பார்த்தா, இப்படி செஞ்சுட்டிங்களே! ‘ஃப்ரீ பாஸ்’ ஏன்தான் இருக்கோ’ என்று ஆஜீத் ஃபீல் பண்ணும் அளவிற்கு அனைவருடைய பேச்சும் இருந்தது.

இதுநாள் வரை தங்கள் மனதுக்குள் இருந்தவற்றையெல்லாம் வெளிப்படுத்திய ஓர் மேடையாக இருந்ததே தவிர, தலைப்புக்கும் அவர்களுடைய பேச்சுக்கும் சம்பந்தமில்லாமல்தான் இருந்தன. நிஷா, வேல்முருகன், சுரேஷ் ஆகியவர்களுடைய பேச்சு, தோனி அனைத்தும் சிறப்பாக இருந்தன. மற்றவர்கள் நீதிமன்ற வழக்கறிஞர்களாக மாறி தங்களுக்காக வாதாடிய விதம் சிறப்பு. மேடையைப் பார்த்ததும் அனைவரும் ஸ்லிப்பாகிவிட்டார்கள் போல.

Bigg Boss 4 Tamil Shivani Suresh Ramya Pandian Rio Sanam Bigg Boss 4 Tamil Shivani

இவர்களுடைய பேச்சுதான் இப்படி என்றால், அர்ச்சனாவின் தீர்ப்பில் தெளிவில்லை. ‘தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை’ என்ற பாணியில் இருந்தது அர்ச்சனாவின் தீர்ப்பு. இறுதியில் யாருக்குச் சாதமாக இந்த பட்டிமன்றம் நிறைவடைந்ததது என்பது தெரியவில்லை. இப்படியா சொதப்புவீங்க பிக் பாஸ்? ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண மறந்துட்டிங்களோ!  நன்றாகப் பேசி கன்டென்ட் கொடுத்திருப்பார் அர்ச்சனா. ஆனால், அவரை ஏன் பிக் பாஸ் நடுவராகப் போட்டீங்க? ஒருவேளை, அவரை நடுவராகப் போடவேண்டும் என்பதற்காகவே இந்த டாஸ்க்கை ஏற்பாடு செய்தீர்களோ! (அதையாவது சரியாகச் செய்திருக்கலாம்!)

அடுத்ததாக நம்ம ரியோவின் பஞ்சாயத்து. ரைட்டு.. ஷிவானியோட கன்டென்ட் வரப்போகிறது என ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பலருக்கு ‘பல்ப்’ கொடுத்துவிட்டார் எடிட்டர். ‘ஒண்ணா சாப்பிடலாமாப்பா’ என்று கேட்டுக் கதறிக்கொண்டிருந்த ரியோவை பலர் நிராகரித்தனர். இறுதியாக அர்ச்சனா குரல் எழுப்ப, ஏதோ ஒருவிதமாகச் சமாதானம் ஆனார்கள். ‘இவர்கள் ஏன் சண்டைபோடுகிறார்கள், ஷிவானியை ஏன் சமாதானப்படுத்துகிறார்கள், ஷிவானி பேசியது எங்கே? ரம்யா ஏன் கத்துகிறார்’ போன்ற பல கேள்விகள் அந்த ‘கட்டில்’ உள்ளன. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இப்படி எடிட் செய்து நம்மை அழவைக்கிறார் பிக் பாஸ்.

இதனைத் தொடர்ந்து லக்ஜூரி பட்ஜெட் பொருள்கள் பெறுவதற்கு, மொத்த மதிப்பெண்களிலிருந்து அவர்களையே மதிப்பெண்களைக் குறைத்துக்கொள்ளும்படி சொல்லி, பிக் பாஸ் தனக்கான வேலையைக் குறைத்துக்கொண்டார். அரக்கர்கள் டாஸ்க், வீட்டில் சரியாக விதிமுறைகளைப் பின்பற்றுவது உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு, 70 மதிப்பெண்கள் குறைத்துக்கொண்டனர். இந்த சீசன் ரைசா, அனிதாதான் போல (தூங்குவதில்).

Bigg Boss 4 Tamil Anita Sampath Suresh Ramya Sanam Bala Bigg Boss 4 Tamil Anita Sampath

நாம் தொன்றுதொட்டு விளையாடிக்கொண்டிருக்கும், ‘மியூஸிக்கல் சேர்’ விளையாட்டை, ‘மாத்து, கைமாத்து’ என்று பேரை மாத்தி விளையாடினார்கள் ஹவுஸ்மேட்ஸ். முதலில் சனம் ஷெட்டி வெளியேற, நானும் எவ்வளவுதான் ட்ரை பண்ணுறது.. இதுதான் சரியான சான்ஸ் என்று நினைத்தாரோ தெரியவில்லை, தன்னிடம் பிடித்த பத்து விஷயங்களைப் பற்றிக் கூறுமாறு பாலாவிடம் வம்பிழுத்தார். ப்ரொபோஸ் செய்வதுபோல், ‘அலைபாயுதே’ மாதவன் ஸ்டைலில் வசனங்களை அள்ளிவீசினார் பாலா. (கொஞ்சம் கொடுமையாகத்தான் இருந்தது. என்ன செய்ய!)

ரமேஷ் முகத்தில் ஷேவிங் க்ரீம் அப்லை செய்து நிஷாவின் அலப்பறை, ஆரிக்கு நைட்டி அணிவித்து மும்தாஜின் ‘மல்லே மல்லே..’ பாடலுக்கு ரம்யா ஆடவைத்தது, ஆஜீத் சம்யுக்தாவிற்கு மீசை வரைந்தது என சில க்ளிப்பிங்கை நமக்குப் போட்டுக்காட்டினார் பிக் பாஸ். ஆனால், போட்டியின் வெற்றியாளராக ஆனது மட்டுமில்லாமல் காஞ்சனாவாக மாறி வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தினார் பிக் பாஸ் வீட்டின் தாத்தா சுரேஷ். இந்தியன் தாத்தா, ராகுல் தாத்தாவை அடுத்து, சுரேஷ் தாத்தாதான் தமிழ்நாட்டின் தற்போதைய சென்சேஷனாக இருக்கிறார்.

Bigg Boss 4 Tamil Vijay tv Suresh Aari Ramya Pandian Kamal hasan Sanam Bala Review Day 18 Bigg Boss 4 Tamil vijay Tv Suresh Chakravarthy

நாமினேஷன் ஆனதிலிருந்து ஆரியின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரக்கர்கள் டாஸ்க், மாத்து கைமாத்து டாஸ்க் என ஒவ்வொரு டாஸ்க்கிலும் சிலபல பிரச்சனைகளில் ஈடுபடுகிறார். அட்வைஸ் கொடுப்பதையும் நிறுத்திவிட்டார் போல. (சந்தோஷமா பாஸு?)

முதல் வாரத்திலிருந்து, ஒவ்வொருவருடைய குணத்திலும் மாற்றங்கள் உள்ளன. ஷிவானி, ஆஜீத், கேபி, சம்யுக்தா, சோம் போன்றவர்களின் கன்டென்ட் மிகவும் எம்டியாகவே இருக்கிறது. மொத்தத்தில் இந்த சீசன் கொஞ்சம் போர். உங்களுக்கு எப்படி?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 4 tamil vijay tv suresh aari sanam bala review day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X