scorecardresearch

அப்போ அதெல்லாம் நடிப்பா!..தெரிந்தே இப்படி செய்யலாமா பிரியங்கா?

Bigg Boss 5 Tamil Day 60 Review Priyanka Thamarai Fight Prank இந்த வீட்டிலேயே தன்னுடைய கேமை விளையாடுகிறாரோ இல்லையோ ஆனால் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளையும் சக போட்டியாளர்களின் நிலைப்பாட்டையும் மிகவும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார் அமீர்.

அப்போ அதெல்லாம் நடிப்பா!..தெரிந்தே இப்படி செய்யலாமா பிரியங்கா?
Bigg Boss 5 Tamil Day 60 Review Priyanka Thamarai Fight Prank

Bigg Boss 5 Tamil Day 60 Review Priyanka Thamarai Fight Prank : பிராங்க் வீடியோக்களை எல்லாம் தடை செய்ய வேண்டும் என்று ஒரு பக்கம் போராட்டம் நடந்துகொண்டிருக்க இங்கு செய்திகள் ஒளிபரப்பு சேனலிலேயே பிராங்க் ஷோ நடத்துக்கொன்றனர். அதுதான் சிறந்த டீம் என்று தீர்ப்பு வேறு! என்னவென்று சொல்வது? ஆனால், பிக் பாஸ் வீட்டிலேயே மிகவும் தெளிவாக நடமாடும் ஜீவன் ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று பார்க்கலாம்!

நேற்றைய ப்ரோமோவில் பரபரப்பாக வெளியான கன்டென்ட் முழுவதும் பிராங்க் என்று கூறி உப்பில்லா உணவு போல முடித்துவோட்டனர். தான் சொல்லும் கேள்வியை கேட்க விடாமல் பிரியங்கா மற்றும் அபிஷேக் இருப்பதாகவும், அதனால் சிபி கோபித்துக்கொள்வதும், சிபிஐக்கு ஆதரவாக வருண் பேசுவதும், இதற்கிடையில் தாமரையைக் கடுப்பேற்ற வேண்டுமென அவர் உபயோகிக்கும் ‘தங்கப்பிள்ளை’ என்கிற வார்த்தையை அள்ளிவிட, பிரச்சனை பெருசாகியது. இதைத்தான் நாங்களும் எதிர்பார்த்தோம் என்கிற ரேஞ்சில் நம்ம பிக் பாஸ் எடிட்டர் நேற்றைய எபிசோடின் பாதி பகுதி இந்தப் பிரச்சனையை சுற்றியே வைத்தார். இறுதியாக அத்தனையும் பிராங்க் என்றதும், மற்ற போட்டியாளர்கள் மட்டுமல்ல நமக்கே கடுப்பாகத்தான் இருந்தது.

ஏற்கெனவே எதற்கெடுத்தாலும் கடுப்பாகும் தாமரையை சீண்டிவிட்டு, பிறகு அவர் புரிந்துகொள்ளவேண்டும் என்று மற்றவர்கள் நினைப்பது எந்த விதத்தில் சரி? அதெல்லாம்விட எந்த செய்திகள் தொலைக்காட்சியிலும் வாசிப்பாளர்களோ அல்லது ரிப்போர்ட்டர்களோ இப்படி பிராங்க் செய்து பார்த்ததில்லை. இவர்களுடைய ஸ்க்ரிப்ட் இன்று செய்திகள் தொலைக்காட்சியை எந்த வகையிலும் பிரதிபலிக்கவே இல்லை. பிரேக்கிங் செய்திகள்தான் இந்த டாஸ்க்கின் கான்செப்ட். ஆனால், அப்படி என்ன பிரேக்கிங் செய்திகளை சேகரித்தனர்? எதன் அடிப்படையில் நேற்றும் இவர்களுக்கு சிறந்த டீம் என்று மதிப்பெண்கள் வழங்கப்பட்டது? சஞ்சீவ் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

இதில் இறுதியாக சிலரைக் குறிப்பிடும் வகையில் பாடல்களை வேறு பாடி கொண்டாடினர். இந்த சீசனில் நட்புக்கான பிரச்சனைதான் அதிகம். அபிஷேக் நிரூப்பின் நட்புக்காக ஏங்குவதும், பிரியங்கா அண்ணாச்சியின் அன்புக்காக ஏங்குவதும், யாருதான் உண்மையில் நாட்போது இருக்கிறார்கள் என்று தாமரை குழம்புவதும் என ஒரே நட்பின் போராட்டக்களமாக மாறியுள்ளது இந்த சீசன்.

இந்த மிகப் பெரிய சலசலப்பிற்குப் பிறகு தாமரையைக் களத்தில் இழுத்தது வெறும் பிராங்க் மட்டுமே, பெர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதெல்லாம் டாஸ்க்தான்மா என்று அமீர், சிபி, சஞ்சீவ் என அனைவரும் ரவுண்டு கட்டி தாமரைக்குப் புரிய வைக்க ட்ரை செய்தனர். ஆனால், எதுவும் வேளைக்கு ஆகலை. தன்னைச்சுற்றி என்னதான் நடக்கிறது என்கிற ரேஞ்சில் குழம்பி உட்கார்ந்திருந்தார் தாமரை.

இந்த வீட்டிலேயே தன்னுடைய கேமை விளையாடுகிறாரோ இல்லையோ ஆனால் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளையும் சக போட்டியாளர்களின் நிலைப்பாட்டையும் மிகவும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார் அமீர். இந்தப் பிரச்சினையின்போதும் தாமரையிடம் தெளிவாக எடுத்துச் சொல்வதில் அமீர் வேற லெவல். அதனை அமைதியாக அமர்ந்து தாமரை கேட்டுக்கொண்டார். அதுதான் அதைவிட ஹயிலைட். இப்படி வாக்குவாதங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே, கிச்சனில் பிரியங்கா தாமரையை அணைத்துக்கொள்ள முயற்சி செய்ய, அதெல்லாம் முடியாது, சண்டை சண்டைதான் என்று தாமரை முரண்டு பிடிக்க, இடையில் அண்ணாச்சியையே பஞ்சாயத்திற்கு கூப்பிட்டு பேச வைக்க ஒரே டிராமாவாக இருந்தது. இதனை வெளியே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அமீர் மற்றும் ராஜுவிற்கு ‘என்னடா நடக்குது இங்கே’ என்று புலம்பிக்கொண்டிருந்தனர். யாரைத்தான் நம்புவது என்கிற குழப்பம்தான் மக்களே!

மீண்டும் குழப்பமடைந்த தாமரை அமீருடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது தனக்குப் புரியவில்லை எதுவும் என்று தாமரை கூறியதற்கு, ‘அதெல்லாம் சும்மா நீங்க தெளிவாகத்தான் விளையாடுகிறீர்கள்’ என்று பதிலளித்தார். ‘அப்படி போடு’ என்று மனதிற்குள் மைண்ட் வாய்ஸ் வெகுண்டெழ, தாமரையின் கைவண்ணத்தில் தயாரான உணவை சாப்பிட்ட பிரியங்கா நேராக வந்து தாமரைக்கு பச்சக்கென முத்தமிட, ‘இப்போ நான் எப்படி ரியாக்ட் பண்ணனும்’ என்கிற கேள்வியோடு உடன் இருந்தவர்களைப் பார்த்தார் தாமரை. ஹய்யோ.. ஹய்யோ.. உங்கள் நிலைமையெல்லாம் நினைத்தால் பாவமாகதான் இருக்கிறது!

முதல் முறையாக நிரூப் நடனமாடியது, தினமும் அக்ஷரா இருவருக்கு மட்டும் டபுள் ஆம்லெட் போட்டு தருவது என சில பல விஷயங்கள் தென்பட்டாலும், பிராங்க் மட்டுமே ஹயிலைட்டாக அமைந்தது. உண்மையான நிகழ்ச்சியில் எப்போது சுவாரசியத்தைக் கொண்டு வரப்போகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil day 60 review priyanka thamarai fight prank

Best of Express