scorecardresearch

நட்பும் இல்லை காதலும் இல்லை… அதற்கும் மேல!

Bigg Boss 5 Tamil Day 66 Review Abinai Pavani Reddy Amir Tamil News ஆரம்பம் எல்லாம் நன்றாக இருந்தாலும், இறுதியில் சண்டையில்தான் நிறைவடைந்தது இந்த ஆரவாரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதி.

Bigg Boss 5 Tamil Day 66 Review Abinai Pavani Reddy Amir Tamil News
Bigg Boss 5 Tamil Day 66 Review Abinai Pavani Reddy Amir Tamil News

Bigg Boss 5 Tamil Day 66 Review Abinai Pavani Reddy Amir Tamil News : பாவனியை சுற்றிதான் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியே சுழல்கிறது. ஆம், முதல் வாரத்திலிருந்து ஆரம்பமான கிசுகிசு 66 நாள்கள் வரை நீடித்திருக்கிறது. பாவனியிடம் அபிநயிக்கு இருப்பது காதலா நட்பா என்கிற வாதம் ஒருபுறம் இருந்தாலும், நடுவில் அமீரின் என்ட்ரி மேலும் இந்த விவாதத்தை விரிவடைய வைத்திருக்கிறது. அதிலும், போகிற போக்கில் மற்ற போட்டியாளர்கள் ஏன் இவ்வளவு முனைப்போடு அமீரை எச்சரிக்கின்றனர் என்பதும் புரியவில்லை. அவ்வளவு அக்கறையா அல்லது வயிற்றெரிச்சலா? எது எப்படியோ இந்த டாப்பிக்கை வீட்டில் இருப்பவர்கள் விட்டுவிட்டு வேறு ஏதாவது டாபிக்கிற்குள் சென்றால் நல்லது.

ஆம், காதலும் இல்லை நட்பும் இல்லை அப்படி என்றால் இந்த உறவுக்குப் பெயர் என்ன என்கிற கேள்வி வீட்டில் உள்ளவர்களுக்கு எழும் அளவிற்கு அப்படி என்ன உள்ளே நடக்கிறது என்பதும் தெரியவில்லை. அக்ஷரா-வருண் பற்றிய பேச்சுக்கள் எடுக்கப்பட்டாலும் இந்த அளவிற்கு வீட்டில் இருப்பவர்கள் பேசியதில்லை. ஆனால், இவர்கள் மூவரின் உறவைப் பற்றி அவர்களைவிட வீட்டில் இருக்கும் மற்றவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள் என்பது, தலைவர்கள் கேள்வியின்போது அப்பட்டமாக வெளிப்பட்டது. அமீர் வீட்டிற்குள் வந்து பாவனியுடன் பழகுவது அபிநயிக்கு பிடிக்கவில்லை என்கிற ஸ்டேட்மென்ட்டிற்கு, பாவனி, அமீர் மற்றும் அபிநய் தவிர மற்ற அனைவரும் ஆம் என்று கூறிய பதிலே சாட்சி. இப்படி இந்த மூவருக்கும் என்னதான் நடக்கிறது என்கிற கேள்விதான் இந்த சீசன் முழுவதும் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, அண்ணாச்சி தனியாக அமீருக்கு அட்வைஸ் செய்தது உண்மையாக அமீர் மேல் உள்ள அக்கரையில் சொன்னாரா அல்லது முதல் நாள் அண்ணாச்சி செய்த செய்கை பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக அமீர் சொன்னதற்காக பதிலடியா என்பது தெரியவில்லை. இவ்வளவு நாள்கள் கழித்து, பாவனியை அடித்து விளையாடியது பிடிக்கவில்லை என்று குறிப்பிட்டதுதான் அண்ணாச்சி மீதான இந்த சந்தேகத்திற்குக் காரணம். தவிர, இதில் சம்பந்தப்பட்ட பாவனியே அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கும்போது, மற்றவர்கள் அவர்களுக்குள் இருக்கும் உறவை நோட்டம் இடுவது எந்த விதத்திலும் சரியல்ல. இம்முறையும் அனைவர்க்கும் பதில் அளிக்கும் விதமாக, இந்த வீட்டிலிருந்து தான் எடுத்துக்கொண்டு போகும் நல்ல உறவு அபிநய்யின் நட்பு என்று கூறினார் பாவனி.

இந்த மூவரின் உறவுகள் ஒருபுறம் இருக்க, சமையலறை முதல் கழிவறை வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாகக் கையாண்டார் இந்த வாரத்தின் தலைவி பாவனி. பிறகு மூன்று கட்சிகளின் பிரச்சாரம் தொடங்கியது. அதில், சிபி கட்சியின் கொடியேற்ற விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். ஆரம்பம் எல்லாம் நன்றாக இருந்தாலும், இறுதியில் சண்டையில்தான் நிறைவடைந்தது இந்த ஆரவாரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதி.

ஆம், விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க மட்டும் தாமரைக்குத் தெரியவில்லை. அப்படி நடிக்கிறாரா என்பதும் நமக்குப் புலப்படவில்லை. சில சமயங்களில் இது விளையாட்டிற்குத்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் தாமரை பல நேரங்களில் மற்றவர்கள் விளையாடுவதை விளையாட்டு என்று அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தேவையே இல்லாமல் அவ்வளவு கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டிய அவசியம் அங்கு இல்லை. பிரியங்காவை விட வீட்டில் அதிகம் கேட்கும் குரலாக இருப்பது தாமரை மட்டுமே.

அபிநயிக்கு சண்டைகள் பிடிக்காது என்று முதல் வாரத்தில் சொன்னார் ஆனால், அவர்தான் தாமரை வெடித்தபோது முதலில் சண்டைக்கு வந்து நின்றார். வெகு நேரமாக பிரியங்காவின் குரல் ஒளிக்காமல் இருந்தது. ஆனால், சரியான நேரத்தில் ஃபைனல் டச் கொடுக்க வந்துவிட்டார். முதுகில் குத்தியவர் நிரூப் என்பதை பலமுறை கூறிக்கொண்டே இருக்கும் பிரியங்கா, 60 நாள்களுக்குப் பிறகு இப்போதுதான் விழித்திருக்கிறார் போல. ஆனால், சாப்பிடும் விஷயத்தில் பிரியங்கா நடந்துகொண்ட விதம் மிகவும் தவறு.

அனைவர்க்கும் சாப்பாடு இருக்கிறதா என்பதை சரிபார்த்து சாப்பிடவேண்டும் என்று பிரியங்கா கூறுவதெல்லாம் நியாமான விஷயம்தான். ஆனால், அதனை சாப்பிடும் நேரத்தில் சொன்னதுதான் மிகவும் தவறான டைமிங். இப்படி எதை நோக்கி இந்த சீசன் செல்கிறது என்பது நமக்கும் தெரியவில்லை, ‘நட்புன்னா என்னனு தெறியுமா?’ என்கிற ரேஞ்சில் சுற்றிக்கொண்டிருக்கும் இவர்களின் சண்டை எப்போது முடிவுக்கு வரும் என்பதும் புரியவில்லை!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil day 66 review abinai pavani reddy amir tamil news