Advertisment

அந்த பிரபலத்தைக் காப்பாற்ற அபிஷேக் வெளியேற்றப்பட்டாரா?

Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Elimination Priyanka பாவனி தன்னிடம் இருக்கும் நாணயத்தை உபயோகிக்கச் சொல்லி மிகவும் வற்புறுத்தியது, உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது.

author-image
priya ghana
New Update
Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Elimination Priyanka

Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Elimination Priyanka

Bigg Boss 5 Tamil Kamal Hassan Abishek Elimination Priyanka : உள்ளே இருந்த இரண்டே வாரத்தில், எவ்வளவு கன்டென்ட் கொடுக்க முடியுமோ, அவ்வளவா கன்டென்ட்டையும் கொடுத்து, கன்டென்ட் ராஜாவாக பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் அபிஷேக் ராஜா. பிக் பாஸ் பொறுத்தவரையில் அதன் ப்ரோமோக்களுக்கு அதிக ரசிகர்கள் உண்டு. அந்த வரிசையில் இத்தனை நாள் வந்த அனைத்து ப்ரோமோக்களிலும் தவறாமல் இடம் பிடித்தவர் அபிஷேக். உள்ளே இருப்பவர்களை மட்டுமல்லாமல் மக்களையும் வெறுப்பேற்றும் வகையில் அவருடைய இந்த பிக் பாஸ் ஸ்ட்ராடஜி தாறுமாறாக இருந்தது. 'எவ்வளவு நாள்தான் நீ மட்டுமே கன்டென்ட் கொடுப்ப' என்று நினைத்த மக்கள் சீக்கிரமே வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர் போல.

Advertisment
publive-image

மஞ்சள் நிற டீ-ஷர்ட்டில் கலக்கலான என்ட்ரி கொடுத்த கமல், அதிரடியாக அகம் டிவி வழியே வீட்டிற்குள் சென்றார். முதல் கேள்வியே சென்ற வாரத்தின் கேப்டன் பற்றியும் கேப்டன்சி டாஸ்க் பற்றியும் கேட்டார். பிரச்சனைகளைக் கையாளுவதிலிருந்து வீட்டில் உள்ளவர்களை அக்கறையோடு கவனித்துக்கொள்வது வரை அனைத்திலும் மிகவும் சிறந்து விளங்கிய சிபிஐக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஆனாலும், ராஜு முன்னிலையில்  இருக்க,பிறகு ஏதோ காரணத்திற்காக கேப்டனாக சிபியை ஏன் தேர்வு செய்தனர் என்ற கேள்வியை முன்வைத்தபோது, ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களைத் தெரிவித்தனர். அதில் தேவையே இல்லாமல் மூக்கை நுழைத்து, 'உங்களைக் கேட்கவே இல்லையே' என்கிற கமலின் நோஸ்கட்டிற்கு ஆளானார் அபிஷேக்.

பின்ன, பதற்றம் இருக்கத்தானே செய்யும். சிபியை கேப்டன் ஆக்குவதுதான் தன்னுடைய நோக்கம் என்று கேட்காத கேள்விக்கு பதிலளித்த அபிஷேக்கின் உண்மையான நோக்கம் ராஜு கேப்டன் ஆகிவிட கூடாது என்பதுதான். அதற்காக, வீட்டில் உள்ள பலரையும் மூளைச் சலவை செய்தவர் அபி. இந்த வேலைகளையெல்லாம் கமுக்கமாகச் செய்துவிட்டு ஒன்னும் தெரியாத பிள்ளைபோல சாந்தமாக அமர்ந்திருந்தார் அபிஷேக். என்ன ஒரு நடிப்பு! சரி எல்லோரும் சுத்தி சுத்தி கழுவிக் கழுவி ஊத்துறாங்களே என்று பரிதாபப்பட்டு, பாத்திரங்களை மிகவும் சுத்தமாகத் தேய்ப்பதில் அபிஷேக்கை மிஞ்ச யாருமில்லை என்கிற பாயின்ட்டை கூறி கொஞ்சமாக ஆறுதல் அடைய வைத்தார் சின்னப்பொண்ணு.

publive-image

மற்றவர்கள் ராஜு கழுத்திலிருந்த மாலையை சிபிஐக்கு மாற்றிப் போட்டது ஒரு பக்கம் இருந்தாலும், ராஜுவும் ஏன் சிபிக்குப் போட்டார், ஏன் பாவனிக்கு போடவில்லை என்று கமலா வினவியதற்கு, பாவனியைவிட சிபியை தனக்குப் பிடிக்கும் என்று ஒரே வரியில் சொல்லி முடித்தார் ராஜு. இந்த முடிவு ராஜுவின் தனிப்பட்ட காரணங்களால் எடுத்த முடிவு என்றால் சிறப்பு. ஆனால், அக்ஷ்ரா மீதுள்ள பற்று காரணமாக பாவனியைத் தேர்வு செய்யாமல் போயிருந்தால், நிச்சயம் அது தவறான முடிவுதான்.

நேரம் ஆகஆக அபிஷேக் மனதிற்குள் கவலை அதிகமாகிக்கொண்டே போயிருக்கும் போல. ஒரு கட்டத்தில் கண்கலங்கிவிட்டார். பிறகு, பிரியங்கா மற்றும் அபிநய் காப்பாற்றப்பட்டனர். 'என்னடா இது நாமும் இப்படி கடைசியாகக் காப்பாற்றப்படுகிறோம். ஒருவேளை நாம் சரியாக விளையாடவில்லையோ!' என்று யோசித்த பிரியங்கா, எப்படிதான் விளையாடுவது என்று ரூல் புக் கொடுக்கச்சொல்லி பிக் பாஸிடம் கேட்டுக்கொண்டிருந்தார். நீங்கதான் உங்களுடைய தனி ரூலை போட்டுக்கொண்டிருக்கிறீர்களே பிரியங்கா!

publive-image

இதற்கிடையில், யாரவது வீட்டை விட்டு வெளியேறும்போது தன்னிடம் இருக்கும் நாணயத்தைப் பிறருக்காகப் பயன்படுத்தலாமா இல்லை தனக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாமா என்கிற குழப்பத்திலிருந்த இசைவாணிக்கு, 'உனக்காக யாரும் வரமாட்டாங்க. நீதான் உனக்காக மட்டும் பயன்படுத்தவேண்டும்' என்கிற டிப்ஸை கொடுத்துவிட்டுச் சென்றார் நிரூப். எவ்வளவுதான் அடித்தாலும், எல்லாவற்றையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு நகரும் இசைவாணியை கமல் பாராட்டவும் செய்தார்.

ப்ரோமோவில் நாம பார்த்தது போல பிரியங்கா மற்றும் நிரூப்பிற்கு நடந்த வாக்குவாதத்தில் நிரூப்பிடம், இது ஒரு கேம் ஷோ இங்கு யாரும் தனக்கான சொந்தம் இல்லை என்கிற தெளிவான பார்வையும், தான் நண்பன் என்று நினைத்தவன் இவ்வளவு சுயநலமாக இருக்கிறாரே அதையும் தன்னிடமே அப்படி நடந்துகொள்கிறானே என்கிற பரிதவிப்பும்தான் அதிகம் இருந்தது. என்ன பிரியங்கா இப்படி சின்னபுள்ளத்தனமா ஏமாந்துடீங்களே! ஆகமொத்தத்தில், நேற்றைய எபிசோடில் அபிஷேக்கின் கன்டென்ட் மையப்படுத்தப்பட்டதோ இல்லையோ, இவ்வளவு நாள் பிரியங்கா மீது எழுந்த கோவமும் வெறுப்பும் தணிக்கிற வகையில் எடிட்டிங் இருந்தது.

publive-image

இறுதியாக அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் ஐக்கி பெரி என மூவரில் யார் வெளியேறப்போகிறார் என்கிற கேள்வியை முன்வைத்து, ஐக்கி சேவ் செய்யப்பட, அபிஷேக் வெளியேற்றப்படுகிறார் என்ற ரிசல்ட் வந்தது. அவ்வளவுதான்... யாருமே துளியும் எதிர்பார்க்காத ஒரு முடிவு இது. அதிலும், ஏகப்பட்ட கன்டென்ட் கொடுக்கும் அபிஷேக் எப்படி வெளியேற்றப்பட்டார் என்கிற கேள்விக்கான தீவிர டிஸ்கஷனும் வீட்டினுள் அரங்கேறியது. இந்த முடிவு அறிவித்தவுடன், பாவனி தன்னிடம் இருக்கும் நாணயத்தை உபயோகிக்கச் சொல்லி மிகவும் வற்புறுத்தியது, உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது.

என்றாலும், கூடவே சுற்றிக்கொண்டிருந்த நிரூப் ஏதோ பேச்சுக்கு அபிஷேக்கை தேற்றுவதுபோன்று பாவலா காட்டியதுபோல் தான் தோன்றியது. ஆழமான ஷாக்கில் இருந்த பிரியங்கா அழுது தீர்த்தார். ஆனால், மது இவ்வளவு அழுது, மனம் வருந்துவார் என்பதுதான் நமக்கான ஷாக். ஒருகட்டத்தில் தன்னிடம் இருந்த நாணயத்தை அபிஷேக்கிடம் கொடுத்த அடுத்த நொடியே அந்த நாணயத்தை பயன்படுத்த முடியாது என்று பிக் பாஸ் அறிவிப்பு வந்தது. 'ஆள விடுங்கடா! மக்கள் தீர்ப்பை ஏத்துக்கிறேன்' என்றபடி வீட்டைவிட்டு வெளியேறினார் அபிஷேக்.

publive-image

வெளியே வந்த அபிஷேக், தன்னுடைய நீண்ட குறும்படத்தை பார்த்து மகிழ்ந்தார். டாப் 5 போட்டியாளர்களின் நிச்சயம் இருப்பேன் என்ற நம்பிக்கை தன்னிடம் இருந்தது என்று கூறிய அபிஷேக்கிற்கு, நம்பிக்கை இருக்கலாம் ஆனால், அதீத நம்பிக்கைதான் ஆபத்து என்று எச்சரித்தார் கமல். இத்தனை நாள்கள் கன்டென்ட் கொடுத்த அபியை வெளியேற்றம் செய்தாச்சு. இனிமேல் யாரெல்லாம் கன்டென்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பிரியங்காவை காப்பாற்றவே அபிஷேக் வெளியேற்றப்பட்டிருப்பாரா? நேற்றைய எபிசோடில் அக்ஷரா, சுருதி எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இதற்கிடையில் சென்ற வாரம் அபிஷேக்கை பார்த்து 'நீதான் அடுத்த வாரம் வெளியே போவ' என்றுகூறினார். நிரூப் சொன்னதுபோல அபிஷேக் வெளியேறிவிட்டார். அதேபோல நேற்றைய எபிஸோடிலும் இசைவாணியை பார்த்து அதேபோல .கலாய்த்துக்கொண்டிருந்தார்.. என்ன நடக்குது இங்க!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Bigg Boss Tamil Vj Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment