சாப்பாடுனா பிரியங்கா, அழுகைனா அக்ஷரா.. கொஞ்சம் முன்னுக்கு வாங்க அபிநய் மற்றும் வருண்!
Bigg Boss 5 Tamil Kamal Hassan Chinnaponnu Eviction Akshara இறுதியாக, வருண், அபிநய் மற்றும் சின்னப்பொண்ணு மட்டுமே அறையில் இருக்க, சின்னப்பொண்ணு வெளியேறப்போகிறார் என்பதை அவர் வாயாலேயே சொல்ல வைத்தார்.
Bigg Boss 5 Tamil Kamal Hassan Chinnaponnu Eviction Akshara
நாம் எதிர்பார்த்தது போலவே சின்னப்பொண்ணு நேற்று வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், பாவனி, சுருதி மற்றும் தாமரைக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் இசைவாணி, அண்ணாச்சி பனிப்போர் போன்றவை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நிரூப் மற்றும் பிரியங்காவிற்கு என்னதான் ஆச்சு? முன்பு இருந்த நட்பு எங்கே போனது? கமலின் வாக்குவாதங்கள் ஒருதலைபட்சமாக இருந்ததா? பார்ப்போம்...
Advertisment
நேரடியாக அகம் டிவி வழியே வந்த கமல், அதிரடியான டாஸ்க்கை தொடங்கி வைத்தார். தலைக்கனம், பாகுபாடு பார்ப்பது, பொய்யாக இருப்பது உள்ளிட்ட நெகட்டிவ் விஷயங்களை வீட்டில் இருக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கு பரிசளிக்கும் வழக்கமான ஒரு டாஸ்க்தான். அதிலும் நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி, இசைவாணி - அண்ணாச்சி, நிரூப் - அக்ஷரா, தாமரை - பாவனி என இவர்கள் மாற்றி மாற்றிப் பாராட்டிக்கொள்ள, ராஜு பாரபட்சம் பார்ப்பதாக சுருதி புகார் தெரிவித்தார். இது என்ன புது கதையா இருக்கு? ஆனால், இன்றைய நாமினேஷன் பட்டியலில் யாருடைய பெயர் வரும், யார் யாரை நாமினேட் செய்வார்கள் என்பது இந்த டாஸ்க் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.
இந்த டாஸ்க்கை தொடர்ந்து ஒவ்வொரு குழுவும் செய்த விவாதங்கள் இருக்கே... முடியல. 'எனக்கு தலைக்கனமா?' , 'நான் மற்றவர்களை கஷ்டப்படுத்துறேனா?' என்று ஒன்னும் தெரியாத குழந்தைகள் போல தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பொய் என்று நிரூபிக்க அனைவரும் என்னென்னவோ உளறிக்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த, 'உடை மற்றும் அடக்கம் என்றால் என்ன?' பற்றிய விவாதத்தை முன்வைத்தார் கமல். உடைக்கான சுதந்திரம் எப்போவோ நாம் பெற்றுவிட்டோம் என்றும் ஒருவர் அணியும் உடை பொறுத்து அவரின் குணத்தை எடை போடுவது சரியல்ல அதைப் பற்றிப் பேச யாருக்கும் எந்த உரிமையும் அல்ல என்பதை மிக அழகாக விவரித்தார் கமல். இருப்பினும், அடக்கம் என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தைத் தாமரையின் கண்ணோட்டத்திலிருந்து புரிய வாய்த்த கமல், ஏன் சிபியை பேசவிடவில்லை என்கிற குறையும் எட்டிப்பார்த்தது. போன் சீசனில் ஆரி போன்று இந்த சீசனில் சிபி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஒருவேளை அமைதியாக இருந்து சாதித்துவிடுவாரோ!
அடுத்தது இம்முறை வித்தியாசமான எவிக்ஷன் செயல்முறையைப் பயன்படுத்தினர். அபிநய், அக்ஷரா, சின்னப்பொண்ணு, வருண், பாவனி மற்றும் பிரியங்கா ஆகியோரை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்று, யாரெல்லாம் காப்பாற்றப்படப்போகிறார்களோ, அவர்கள் பற்றி விடுகதை கேட்க, அதற்கு விடையானவர்கள் அவர்களாகவே அந்த அறையை விட்டு வெளியேற வைத்தனர். அந்த வரிசையில், சாப்பாட்டை பற்றி குறித்து பிரியங்கா முதலில் காப்பாற்றப்பட, அடுத்ததாகத் தொட்டதுக்கெல்லாம் அழும் அக்ஷராவை காப்பாற்றினார் கமல். தொடர்களில் நடித்தும் தமிழ் பேச வரலையா என்று குறிப்பிட்டு பாவனி காப்பாற்றப்பட, மிகவும் தைரியசாலி எனக்கூறி சுருதி காப்பாற்றப்பட்டார். இறுதியாக, வருண், அபிநய் மற்றும் சின்னப்பொண்ணு மட்டுமே அறையில் இருக்க, சின்னப்பொண்ணு வெளியேறப்போகிறார் என்பதை அவர் வாயாலேயே சொல்ல வைத்தார்.
அபிநய் மற்றும் வருணிடம் இன்னும் நல்லா விளையாட வேண்டும் என்றும் அவர்களிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்றும் சிறிய டிப்ஸை கொடுத்துவிட்டு இருவரையும் அனுப்பி வைத்தார் கமல். சின்னபொண்ணுவை வீட்டிற்குள் அனுப்பி வெளியே வரவைக்கலாமா அல்லது அப்படியே வெளியேற்றிவிடலாமா என்று யோசிக்க சிறிது நேரம் எடுத்துக்கொண்ட பிக் பாஸ், வீட்டிற்குள் சென்று வெளியே வாங்க என்று அறிவித்தார். அதன்படி, சின்னப்பொண்ணு மீண்டும் வீட்டிற்குள் வந்ததும் அனைவரும் மகிழ்ந்தனர். ஆனால், தான் வெளியேறப்போவதாகத் தெரிவித்ததும் அக்ஷரா, தாமரை மற்றும் ஐக்கி பெரி உடைந்து அழத்தொடங்கிவிட்டனர். வீட்டைஸ் விட்டுச் செல்லும்போது, ஏதாவது தவறு செய்திருந்தால் தன்னை மன்னிக்குமாறு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு விடைபெற்றார் சின்னப்பொண்ணு.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அந்த நாணயத்தைப் பற்றிய விவாதங்கள் தொடங்கின. யாரிடம் நாணயம் உள்ளது, அதனை எப்படி எடுக்கலாம் உள்ளிட்ட பிளானிங் நடைபெற்றது. வருண் இப்போதுதான் மெல்லெமெல்ல ஸ்க்ரீனுக்குள் வர ஆரம்பித்திருக்கிறார். போகப்போக அவருடைய ஆட்டத்தையும் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நாமினேஷன் தினம்.. யார், யாரை நாமினேட் செய்ய வாய்ப்பு இருக்கிறது மக்களே?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil