Bigg Boss 5 Tamil Kamal Hassan Ciby Annachi Abishek Tamil News : இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க, நமக்கும் பதற்றம் கூடவே தொற்றிக்கொள்கிறது. கதவு திறக்கப்படுமா? யாராவது வெளியே செல்வார்களா? 5 லட்சம் தொகையை இம்முறை யார் எடுத்துச் செல்வார்கள்? என பல கேள்விகள் நம்மிடம் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், வீட்டிற்குள் இனி என்ன ரணகளம் ஆகப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். கமல் நேற்றைய எபிசோடில் என்ன புதுமைகளை செய்திருந்தார் என்பதைப் பார்க்கலாம்…
எடுத்ததுமே, தாமரையிடம் பாவனி மிகவும் கோபமாக ராஜூவை திட்டித் தீர்த்தார். அப்போது, யார் எவ்வளவு கெட்டவார்த்தைகள் பேசியிருந்தாலும், தான் ஒரு கேட்ட வார்த்தைகூட பேசவில்லை என்று பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார் தாமரை. இது உண்மையிலேயே பாராட்டுக்குரியதுதான். தங்களால் முடிந்தவரை ஏதாவதொரு கெட்ட விஷயத்தை விட முயற்சி செய்திருக்கிறார்! வாழ்த்துகள் தாமரை. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு செல்லாமல் இருந்தால் மிக சிறப்பு.
அடுத்ததாக அகம் டிவி வழியே வீட்டிற்குள் வந்த கமல், கதவு திறந்தால் யாராவது வெளியே வர விருப்பம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதுவரை, வெளியே போய்விடுவேன் என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்த தாமரை, பாவனி கமல் முன்பு இல்லை போகவில்லை என்று அடம் பிடித்தனர். எனவே, இம்முறையும் யாரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேறவில்லை.
அடுத்ததாக மீண்டும் இந்த வீட்டில் அன்பு பிரச்சனை தொடங்கியது. அன்பு என்ற ஒன்றை எப்படி கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற விவாதங்கள் வரும்போது, பிரியங்காவைத்தான் மொத்த வீடும் டார்கெட் செய்தது. எது எப்படியோ, சென்ற சீசனில் அர்ச்சனா போன்று அர்ச்சனை வாங்காமல் பிரியங்கா எஸ்கேப் ஆனார். நல்லது..!
மேலும், இந்த வீட்டிலேயே முடிவு எடுப்பதில் தாமதப்படுத்துபவர் சிபி என்று பெரும்பாலானவர்கள் கூறினார்கள். ஆனால், ரேங்கிங் டாஸ்க்கிலிருந்து கருப்பு ரோஜா டாஸ்க் வரை அனைத்திலும் முதலாவது முடிவு எடுத்து அதில் வலுவாகவும் இருந்தவர் சிபிதான். நமக்குத் தெரியாமல் ஏதாவது நடந்திருக்குமோ! அதுசரி, தலையும் புரியாமல் வாளும் புரியாமல் இம்முறை ஏராளமான விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
தற்போது வீட்டில் இருப்பவர்களுக்கு பதிலாக, வெளியே சென்றவர் இருந்திருக்கலாம் என்ற கேள்வியை முன்வைத்தபோது, பெரும்பாலவர்களின் சாய்ஸ் அண்ணாச்சிதான். வீட்டில் இருக்கும் சஞ்சீவ் தான அதிகமான ரிப்லேஸ்மென்டுகளை வாங்கினார். அதில், சில வாக்குகளை அபிஷேக்கும் பெற்றார். அபிஷேக் பெயர் இடம்பெறவில்லை என்றால்தான் ஆச்சரியம்! ஆனால், கமல் அப்போது அண்ணாச்சியைப் பார்த்து சொல்வது போல ‘உங்களைதான் அதிகம் சொல்லுகிறார்கள். சரி சரி உங்க வேலையை பாருங்க’ என்று சொன்னதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்கிற கேள்வி எழாமல் இல்லை.
எப்போதும் கமல் ஹாசனே, யார் வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள் என்று கூறுகிறாரே, இம்முறை மக்கள் குரலில் வித்தியாசமாக சொல்லலாம் என்று நினைத்த பிக் பாஸ், ஆடியன்ஸை வைத்து தங்களுக்கு யார் ஃபேவரைட் என்கிற விஷயத்தையும், தாங்கள் யாரைக் காப்பாற்றப்போகிறார்கள் என்பதையும் சொல்ல வைத்தார். என்ன ஒரு மாஸ்டர் பிளான்! பலே பிக் பாஸ்!
அந்த வகையில் இறுதியாக, சிபி மற்றும் சஞ்சீவ் எஞ்சி இருக்க, சஞ்ஜீவ்தான் வெளியே வரப்போகிறார் என்று கமல் அறிவித்ததும், யாருக்கும் எந்த ஆச்சரியமும் இல்லை. அன்போடு வழியனுப்பி வைத்தனர். இன்னும் இரண்டு வாரங்கள்தானே உள்ளது. அதற்குப் பிறகு வெளியேதானே வரப்போகிறோம் என்கிற மைண்ட் செட் போல. இறுதியாக அனைவரும் வீட்டிற்குள் அமர்ந்து சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருக்க எண்டு கார்ட்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil