முதல் சீசனில் ஓவியா.. இப்போது பாவனி.. மக்கள் மனதை வெல்வாரா இவர்?
Bigg Boss 5 Tamil Review Pavani Niroop Varun Akshara இப்போதுதான் வருணின் முகம் பரீட்சையமாக ஆரம்பித்திருக்கிறது. வரும் நாள்களில் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்போம்.
Bigg Boss 5 Tamil Review Pavani Niroop Varun Akshara இப்போதுதான் வருணின் முகம் பரீட்சையமாக ஆரம்பித்திருக்கிறது. வரும் நாள்களில் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்போம்.
Bigg Boss 5 Tamil Review Pavani Niroop Varun Akshara
Bigg Boss 5 Tamil Review Pavani Niroop Varun Akshara : இந்த பிராங்க் மோகம் யூடியூபையும் தாண்டி இப்போது பிக் பாஸ் வீடு வரை சென்றிருக்கிறது. ப்ரோமோவை பார்த்து ஏமாந்து போனவர்கள் லிஸ்டில் நாங்களும் இருக்கிறோம் மக்களே. எடிட்டர் வரவர ஓவர் குறும்புக்காரனாக மாறிக்கொண்டு இருக்கிறார். முன்பெல்லாம் ப்ரோமோவில் இருப்பது ஷோவில் இருக்காது, பிறகு அன்சீனில் அவை சேர்க்கப்பட்டன. ஆனால், இப்போதோ வீட்டினுள் பிராண்ட் செய்யப்படும் காட்சியை ப்ரோமோவில் வைத்து, நம்மை பிராங்க் செய்துகொண்டிருக்கிறார் எடிட்டர். அப்படி என்னதான் நடந்தது பிக் பாஸ் வீட்டில்? பார்ப்போம்....
Advertisment
காலை பாடல் ஒலிப்பதற்கு முன்பே, பாவனி மற்றும் சுருதி இந்த வாரம் முழுவதும் நிலத்தின் ஆளுமையைப் பெற்றிருக்கும் நிரூப்பிற்கு அவர் சொன்னதைப்போலக் காலை உணவு தயாரா செய்துகொண்டிருந்தனர். அதனை நிரூப்பிடம் கொடுத்தவர்கள் அவரிடம் பாராட்டையும் பெற்றுச் சென்றனர். ஆனால், பிறகுதான் தெரிந்தது 8 பாடலுக்கு பிறகுதான் அதனை நிரூப்பிடம் கொடுக்க வேண்டும் என்று. என்ன ஒரு கடமை உணர்ச்சி என்று இருவரும் நம்மை வியப்பில் ஆழ்த்தினர்.
பிறகு மாரி பாடலுக்கு நடனமாடி அந்த நாளை உற்சாகமாக அனைவரும் தொடங்கினர். இந்த வாரம் வீட்டின் தலைவரான வருண், இதர போட்டியாளர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கி சுறுசுறுப்பாக்கும் சில உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்தார். அப்போது, நேரத்திற்கான முக்கியத்துவத்தைப் பற்றி கொஞ்சம் வகுப்பு எடுத்த பிக் பாஸ், அனைவரும் விரைவாக ரெடியாகி வருணிடம் ரிப்போர்ட் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Advertisment
Advertisements
பிறகு வழக்கம்போல வருண் மற்றும் அக்ஷரா பேசிக்கொண்டிருக்க, மைக் போடாத காரணத்தினால் வருணுக்கு பிக் பாஸ் தண்டனை கொடுத்தார். அதன்படி 10 தோப்புக்கரணங்கள் போடவேண்டும். இந்த தண்டனையை இந்த ஒரே காரணத்திற்காக ஒரே நாளில் பலமுறை செய்தார் வருண். எண்ணம் வருண் இப்படி பண்ணுறீங்களேமா? இப்போதுதான் வருணின் முகம் பரீட்சையமாக ஆரம்பித்திருக்கிறது. வரும் நாள்களில் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்போம்.
மினி குழுவான சுருதி, பாவனி, மது மற்றும் இசைவாணி ஒருபக்கம் தனியே அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்க, அண்ணாச்சி, தாமரை மற்றும் ஐக்கி மற்றொரு பக்கம் அவர்களைப் பற்றி கமென்ட் அடித்துக்கொண்டிருந்தனர். நிரூப்பிற்கு சமைத்துக் கொடுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்கிறாரே, இசைவாணிக்கு அப்படி எதுவும் சொல்லவில்லையா? என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த சுருதியிடம், மீண்டும் தன்னுடைய புலம்பலை ஆரம்பித்தார் இசைவாணி. அது என்னவோ ஒரு பக்கம் உண்மைபோலதான் தெரிந்தது. இசைவாணி அவருடைய ஆளுமையைப் பயன்படுத்திய வாரத்தில் அவர் எது சொன்னாலும் யாரும் கேட்கும் எண்ணத்திலேயே இல்லை. அவ்வளவு ஏன், இவ்வளவு நேரம் நியாயம் பேசிக்கொண்டிருக்கும் பாவனி மற்றும் சுருதியும்கூட இசைவாணியின் குரலுக்கு செவிசாய்க்கவில்லையே!
பிறகு, நம் அனைவர்க்கும் ஃபேவரைட்டான ஆடல் பாடல் டாஸ்க். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தைக் கொடுத்து, அதற்கேற்ற காஸ்டியூம்களையும் கொடுத்து பெர்ஃபார்ம் செய்ய வைத்தனர். உண்மையில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தை ஏற்ற பிரியங்கா மற்றும் புலிகேசி கதாபாத்திரத்தை ஏற்ற மதுமிதா ஆகியோரை பார்க்கும்போதே சிரிப்பு வந்தது. அதிலும் பிரியங்காவின் துருதுரு நடிப்பு வழக்கம் போல சுவாரஸ்யமாகவே இருந்தது.
படையப்பாவாக சிபியும் நீலாம்பரியாக அக்ஷராவும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக, இருவருக்குமிடையேயான உரையாட ரசிக்கும் விதமாக இருந்தது. சந்திரமுகியாக இசைவாணி ஆடிய நடனம் சிறப்பாகவே இருந்தது. ஆனால், கஜினி வேடத்தில் ஷோ டைமிங்கின் போது பாவனி என்ன செய்தார் என்பதுதான் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு செர்னாபோது பாவனிக்கு ஆர்மி எல்லாம் ஆரம்பித்து பில்ட் அப் கொடுத்தனர். ஆனால், அவர்களே தற்போது ஆர்மியை கலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு பாவனி பலரின் வெறுப்புகளைக் கடந்த சில நாட்களிலேயே சம்பாதித்துள்ளார். அவர் வீட்டில் உள்ள அனைவரோடும் உண்மைத்தன்மையாக இல்லாததே இதற்குக் காரணம். இல்லையென்றால் ஓர் நடிகையாக இருந்துகொண்டு நேற்றைய டாஸ்கை இன்னும் சிறப்பாகவே செய்திருக்க முடியும்.
தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பில், மற்றவர்களின் உணர்வுகளை வெளிக்கொண்டுவரத் தவறியதால், பாவனிக்கு தண்டை கொடுக்க முடிவு செய்த பிக் பாஸ், அந்த தண்டனைக்காக முதலாம் சீசன் வரை சென்றார். ஆம், முதல் சீசனில் ஜூலி நடக்கும் இடமெல்லாம் சிவப்பு கம்பளத்தை ஓவியா விரித்து வரவேண்டும் என்று டாஸ்க் கொடுத்திருந்தனர். அதையேதான் இம்முறை, யார் அந்த குறிப்பிட்ட பகுதியைக் கடக்கவேண்டும் என்றாலும், சிவப்பு கம்பளத்தை விருத்தி அழைத்துச் செல்லவேண்டும் என பாவனிக்கு பனிஷ்மென்ட் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்துதான் நமக்கான மூக்கடைப்பு சம்பவம். ப்ரோமோவை பார்த்து தாமரைக்கு என்னதான் ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறார் என்று புலம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், அவை அனைத்தும் நிரூப் கொடுத்த டாஸ்க் என்பது நிகழ்ச்சியில்தான் தெரிய வந்தது. மது அவ்வப்போது சிரித்தாலும், தாமரை திறமையான நடிகை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 'எவ்வளவு டெக்கினிக்கா நம்மால் ஏமாத்திருக்காய்ங்க! என்றாலும், நேற்றைய எபிசோட் ஓரளவு என்டெர்டெயினிங்காகவே நகர்ந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil