scorecardresearch

தன்னையே தொலைத்த இசைவாணி, பழிவாங்கும் நோக்கில் நிரூப்.. ஆட்டம் சூடு பிடித்ததா?

Bigg Boss 5 Tamil Review Priyanka Niroop Varun Isaivani Thamarai பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, ஒருவர் சொல்லுவதை அமைதியாகக் காதுகொடுத்துக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லையே!

தன்னையே தொலைத்த இசைவாணி, பழிவாங்கும் நோக்கில் நிரூப்.. ஆட்டம் சூடு பிடித்ததா?
Bigg Boss 5 Tamil Review Priyanka Niroop Varun Isaivani Thamarai

Bigg Boss 5 Tamil Review Priyanka Niroop Varun Isaivani Thamarai : நிரூப்பின் பழிவாங்கும் படலம் முதல் ராஜு பாவனியைச் சேர்த்து வைக்க முயற்சி செய்யும் பிரியங்காவின் உழைப்பு வரை நேற்றைய எபிசோட் விறுவிறுப்பாகவே நகர்ந்தது. இசைவாணியின் வேறு முகம் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல பார்வையாளர்களையும் பொறுமையை இழக்கச் செய்கிறது. வீட்டின் கலாட்டா மொமென்ட்டுகளை இனி பார்க்கலாமா…

‘எங்க வீட்டுக் குத்துவிளக்கு..’ பாடல் முடிந்ததும், நிரூப்பின் ஆட்டம் தொடங்கியது. வருண் சொல்லுவதை கேட்கவே கூடாது என்கிற நோக்கில் நடந்துகொண்டார் நிரூப். இவ்வளவு நாள் இருந்த ஆளுமை வாரங்களிலேயே, சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் சொல்லப்போனால் சிறுபிள்ளைத்தனமாகவும் டாஸ்க்குகளை கொடுத்து ரசிக்கும்படியாக இருப்பது வருணின் ஆளுமைதான். இந்த கடுப்புதான் என்னவோ, வருண் சொல்லுவதை எந்த வகையிலும் கேட்கவே கூடாது என்கிற நோக்கில் இருப்பதுதான் பிரச்சனை.

அடுத்ததாகப் பிரியங்கா, பாவனி மற்றும் ராஜூவை எப்படியாவது சேர்த்து வைக்கவேண்டும் என்று நினைத்து என்னென்னவோ முயற்சிகள் செய்தார். ஆனால், எந்த அளவிற்கு அது கைகூடியது என்றுதான் தெரியவில்லை. பிரியங்காவின் இந்த முயற்சியும் தன்னுடைய தனி பாணியில் சுவாரஸ்யமாகவே நகர்த்தினார். என்னதான் சொல்லுங்க, ராஜு பிரியங்கா காம்போ வேற லெவல். இப்படி பிரியங்கா மீது வெறும் பாசிட்டிவ் எனர்ஜி மட்டுமே இந்த வாரம் இருந்தது.

கண்ணாடியாக இருந்து ஐக்கி பற்றி இமான் அண்ணாச்சி சொல்லும் வேளையில், தவறிக் கைவிட்டதால், அண்ணாச்சிக்கு ஒரு பேட்ஜ் கிடைத்தது. இந்த வாரம் அண்ணாச்சியின் வாரம் போல. ஆனால், அதிலும் ஐக்கியே எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொண்டு, அவை எப்படி அண்ணாச்சிக்கு தெரியும் என்று புலம்பியதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன ஐக்கி இதெல்லாம்.

பிறகு, நிரூப் பற்றி வருண் கூறிய விதம் உண்மையில் மிகவும் வெளிப்படையாக இருந்தது. ஏற்கெனவே இருக்கும் பகையை மேலும் மேலும் வளர்ப்பதுபோல் இல்லாமல், உள்ளதை உள்ளபடி சொன்னார் வருண், ஆனால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் நிரூப்பினால் முடியவில்லை. இது வழக்கம்தான் என்றாலும், நிரூப்பிற்கு ஏன் இவ்வளவு கோபம் என்றுதான் புரியவில்லை. அதையும் தூண்டி விடுவதுபோல, ‘வருண் என்றால் பயம். அதனால்தான் இப்படிச் செய்கிறார்’ என்று வருண் கொளுத்திப்போட்டதெல்லாம் வேற லெவல். இது முடிந்ததும், அபிநய் வருணிடம் சென்று நன்றி தெரிவித்து, தன்னுடைய மனதிலிருந்த பாரத்தை எல்லாம் இறக்கி வைத்தது போல உணர்வதாக தெரிவித்தார். அபிநய் இந்த முறையும் எவிக்ஷனிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவார் போலிருக்கே!

 பிறகு, அக்ஷரா பாவனி பற்றி நல்ல விதமாகவே எடுத்துரைத்தார். ஆனால் என்ன, பாவனியை பார்த்து பேசியதை விட அக்கம் பக்கத்தை பார்த்து பார்த்து அக்ஷரா பேசியதுதான் அதிகம். இவர்களைத் தொடர்ந்து இசைவாணியை பற்றி தாமரை கூறினார். என்னவேண்டுமானாலும் சொல்லு, நான் இப்படிதான் அலட்சியப்படுத்துவேன் என்கிற நோக்கத்திலேயே ஆரம்பத்திலிருந்து நின்றுகொண்டிருந்தார் இசைவாணி. ஆனால், அந்த அளவிற்கு நெகட்டிவ்வாக தாமரை எதுவும் இசைவாணி பற்றி கூறவில்லை. அதற்கே அவ்வளவு சலித்துக்கொண்டு நின்றது ஏன் என்று புரியவில்லை. இசைவாணியின் இத்தகைய ஆட்டிடியூட் மற்ற போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்குக் கடுப்பை கிளப்பியது. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, ஒருவர் சொல்லுவதை அமைதியாகக் காதுகொடுத்துக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லையே! அதனைத் தொடர்ந்து அவர்களின் வாதங்களை எடுத்து வைக்கலாம். என்னவோ போங்க!

முகத்தில் அடிப்பதுபோல பேசாமல் இருக்கும்போதே அப்படிப் பேசுகிறார் என்று இசைவாணி கூறுவது எல்லாம் சரிதான். ஆனால், அதே அளவிற்கு இசைவாணியும் நடந்துகொண்டால் கூடுதல் சிறப்பு. அதேபோன்று வாதங்களுக்கு இடையில் பேசும் தமிழ் புரியவில்லை என்று சொல்லும் இசைவாணிக்கு, எப்போதும் பேசும்போது புரிகிற தமிழ் இதுபோன்ற சமயங்களில் மட்டும் எப்படிப் புரியாமல் போகும்? என்ற ராஜுவின் கேள்வி நியாயமானதுதான். ஆனால், இதனை அவரிடமே கேட்கலாமே! வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார் இசைவாணி. அதா மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டு கேமில் ஃபோக்கஸ் செய்தால் ஆதரவு அவருக்குப் பெருகும். இந்த வாரம் நெகடிவிடியாக உள்ளார் இசைவாணி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil review priyanka niroop varun isaivani thamarai