பிக் பாஸ் சீசன் 5: அந்த புதுமண ஜோடியும் வர்றாங்களாமே..!

Bigg Boss 5 Tamil Vijay Tv Contestants Survivor Zee Tamil ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற சினேகன் மீண்டும் பங்குபெறவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

Bigg Boss 5 Tamil Vijay Tv Contestants Survivor Zee Tamil
Bigg Boss 5 Tamil Vijay Tv Contestants Survivor Zee Tamil

Bigg Boss 5 Tamil Vijay Tv Contestants Survivor Zee Tamil : சர்வதேச அளவில் ‘பிக் பிரதர்’ என்று தொடங்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி, இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட ஏழு மொழிகளில் ‘பிக் பாஸ்’ என்று பெயர் மாற்றம் செய்து, ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. ஏராளமான நெகடிவ் விமர்சனங்கள் எழுந்த போதிலும், ஒவ்வொரு சீசன் நிறைவடையும் நேரங்களில், அடுத்த சீசன் எப்பொழுது வரும் என்கிற எதிர்பார்ப்பையே விட்டுச் செல்கிறது. அந்த வகையில் விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ஐ தொடங்கவுள்ளது.

கடந்த ஜூலை மாதமே தொடங்கியிருந்த பிக் பாஸ் சீசன் 5, கொரோனா பரவல் காரணமாகத் தாமதமாக ஆரம்பமாக உள்ளது. சென்ற சீசன், அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரி வரை நீண்டது. இந்த ஆண்டு சீக்கிரமே ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டும் தள்ளிப்போனது.

இந்நிலையில், விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் சீசன் 5-ல் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்கிற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற சினேகன் மீண்டும் பங்குபெறவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அதுவும் தனியாக இல்லை. சமீபத்தில் திருமணமான சினேகன், தன் மனைவி கன்னிகாவுடன் சேர்ந்து பங்குபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறியே!

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக ஜீதமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி களமிறங்க உள்ளது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், விஜயலட்சுமி, நந்தா, வனிதா விஜயகுமார், கோபிநாத் ரவி, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா, ஜான் விஜய், விதியுலேகா, விஜே பார்வதி, ஷாலு ஷம்மு, அனிகா சுரேந்திரன், சஞ்சனா சிங் ஆகியோர் பங்குபெற உள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil vijay tv contestants survivor zee tamil

Next Story
விஜய் டிவி நடிகையுடன் ஜி.பி.முத்து… அட, என்ன இந்தப் பக்கம்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com