Advertisment

மாறி மாறி உதட்டுல கிஸ் கொடுத்த அமீர்; ஆனால் இது பாவனிக்கு அல்ல!

பிக்பாஸ் சாம்பியன் ராஜூவை படுக்க வைத்து, அமீர் தண்டால் எடுப்பது போல் இவருக்கு லிப் கிஸ் அடிக்கிறார்.

author-image
WebDesk
New Update
மாறி மாறி உதட்டுல கிஸ் கொடுத்த அமீர்; ஆனால் இது பாவனிக்கு அல்ல!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் பாவனி ஜோடி தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி மேடையிலேயே பாவனிக்கு லவ் ப்ரபோஷ் செய்திருந்தது வைரலாக பரவியது. அதே சமயம் தற்போது அமீர் ஒருவருக்கு லிப் கிஸ் கொடுக்கும் ப்ரமோ வைரலாகி வருகிறது

Advertisment

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதில் நடந்து முடிந்த 5-வது சீசனில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஜோடிதான் அமீர் பாவனி. ஏற்கனவே திருமணமாகி தனது கணவனை பறிகொடுத்த பாவனி தனது சோக கதையை பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் சொல்லும்போதே ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர்.

அதே சமயம் வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீர் ஒரு பாவனியுடன் நெருக்கம் காண்பித்தார். அதுவரை ஏனோதானே என்று சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அமீர் வருகைக்கு பின் இளமை துள்ளளுடன் அரங்கேறியது. இவர்களின் நெருக்கத்தை பார்த்த போட்டியாளர்களும் ரசிகர்களும் அமீர் பாவனி இருவரும் காதலிப்பதாக சொல்லிவந்தனர்.

இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் ஒன்றாக விளம்பரங்களில் நடிப்பது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது என இருந்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பாவனியிடம் லப் ப்ரபோஸ் செய்திருந்தார். அதை பாவனியும் ஏற்றுக்கொண்டது போலத்தால் இருந்தது. இதனிடையே தற்போது வெளியாகியுள்ள பிபிஜோடிகள் ப்ரமோ வைரலாகி வருகிறது.

இதில் பிக்பாஸ் சாம்பியன் ராஜூவை படுக்க வைத்து, அமீர் தண்டால் எடுப்பது போல் இவருக்கு லிப் கிஸ் அடிக்கிறார். அதற்கு ராஜூ வேண்டாம் வலிக்குனு என்று சொல்ல அரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது. இதை பார்த்த நடுவர் ஒருவர் பாவனியிடும் இவன் உனக்கு வேண்டாம் என்று என்று சொல்கிறார்.

இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment