மீரா மிதுனுடன் செம்ம சண்டை: விஜய், சூர்யாவுக்காக களம் இறங்கிய நடிகை

பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் நடிகர்கள் விஜய், சூர்யாவை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருவதைக் கண்டித்து, நடிகை சனம் ஷெட்டி மீரா மிதுனுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

By: Updated: August 6, 2020, 09:13:46 PM

பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் நடிகர்கள் விஜய், சூர்யாவை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட கோபம் அடைந்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து, நடிகை சனம் ஷெட்டி, மீரா மிதுனுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடவடிக்கைகள் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை வெளியே வந்த பிறகும் அவர் சர்ச்சைகளை விடுவதாயில்லை சர்ச்சைகளும் அவரை விடுவதாயில்லை. தொடர்ந்து சர்ச்சைகளுடனே இருக்கும் மீரா மிதுன் அண்மையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் நெப்போட்டிஸம் தயாரிப்புகள் என்று கூறி கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமில்லாமல், கோலிவுட்டில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்வதற்காக ஒரு மாஃபியா செயல்படுகிறது என்று வீடியோ வெளியிட்டார். மேலும், இயக்குனர் மணிரத்தினம் தனது படங்களில் பயன்படுத்திய அனைவருமே மாதவன், அரவிந்தசாமி தவிர அனைவரும் நெப்போட்டிஸம் தயாரிப்புகள்தான் என்று கடுமையாக தாக்கி விமர்சித்தார்.

இதனால், கோபம் அடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனுக்கு ட்விட்டரில் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ பேச்சுகளும் அதற்கு விஜய், சூர்யாகளின் எதிர்வினைகளும் இரண்டுமே ஆபாசத்தின் எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.


மீரா மிதுன் ஒரு ட்விட்டில், “கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு அதன் பிறகு தண்ணீர் பிரச்சனை பற்றி பேசுவதற்கு நான் விஜய் அல்ல. நான் எந்த விளம்பரங்களிலும் நடிப்பதில்லை” என விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகை மீரா மிதுன் நடிகர் விஜய் பற்றி விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை தெரிவித்து சனம் ஷெட்டி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடிகை சனம் ஷெட்டி நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் மீரா மிதுனை கண்டித்தும் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “விஜய் சார் பற்றி பேசி இருக்கீங்க மீரா. அவர் நெபோட்டிஸம் புரோடக்ட் என சொல்கிறீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எஸ்.ஏ.சி சார் மூலமாக அவருக்கு சினிமாவில் நுழையும் வாய்ப்பு சுலபமாக கிடைத்திருக்கலாம், ஆனால், அவர் முதல் வெற்றியை பெறுவதற்கு ஐந்து வருடங்கள் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டி இருந்தது. முதல் படத்திலேயே, இவர் எல்லாம் ஒரு நடிகரா.. எனக் கூறி நெகட்டிவாக மீடியா உள்ளிட்ட பலரும் பேசினார்கள். ஆனால், அது எதையும் கண்டுகொள்ளாமல், அவர் தொடர்ந்து படம் நடித்து தன்னுடைய திறமை மற்றும் கடின உழைப்பால் அனைவரது மனதையும் கவர்ந்தவர். இப்போ வரைக்கும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அவங்களுக்கு இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவரது அர்ப்பணிப்பு மற்றும் படங்களில் அவரது நடிப்பு பெர்ப்பாமென்ஸ் தான்.

இதை பணத்தால் வாங்க முடியாது. அதனால் இதுபோன்ற உண்மையான பெரிய நடிகர்கள் பற்றி பேசுவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். நீங்க ஒரு யூ டியூப் சேனலில் பேட்டி கொடுத்து, அதனை விஜய் ‘இன்செக்யூர்’ஆக உணர்ந்து ஆன்லைன் வந்தாங்களா.. செம காமெடி மீரா.. நம்புற மாதிரி எதாவது சொல்லுங்களேன். அவரின் நட்சத்திர அந்தஸ்திற்கு ‘இன்செக்யூர்’ஆக உணர்ந்து இதை செய்திருக்க மாட்டாங்க, உங்களுக்கு பதில் அளிக்கவும் அவர்கள் இறங்கி வரவும் மாட்டாங்க. இதுக்கு நானே போதும் உங்களுக்கு பதில் சொல்ல. சைபர் புல்லிங், ஹராஸ்மெண்ட் என சொல்வதை தயவு செய்து நிறுத்துங்கள், இதை நீங்கள் தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள். இனிமேல் உங்களுடைய எல்லா புல் ஷிட்டிங் விஷயங்களையும் நிறுத்த வேண்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss celebrity meera mithun vijay and surya sanam shetty video against meera mithun

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X