scorecardresearch

இது பெர்ரி இல்ல.. பார்பி.. இணையத்தில் செம வைரலாகும் ஐக்கியின் புதிய ராப் சாங்!

ஐக்கி பெர்ரி @ ஐக்யா காமராஜ் ஒரு இந்திய ராப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்.

iykki berry
Bigg boss fame iykki berry new rap song goes viral on social media

பிக்பாஸ் புகழ் ஐக்கி பெர்ரி, புதிதாக பாடிய ’எலா’ ராப் சாங் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

ஐக்கி’ ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார். பின்னர் KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார், இது 2008 இல் இசை இயக்குனர் A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும்

ஐக்கி’ ஒரு பாடலாசிரியராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது பாடல் வரிகள் மற்றும் ட்யூன்’ இளம் இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் மற்றும் ராப்பர் ஜாக்ஸ் ஈசன் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது. பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்த ஐக்கி, தொடர்ந்து டெமோக்களை பதிவு செய்யத் தொடங்கினார். மேலும் பாடல்கள் எழுதுவது, ராப் மற்றும் இசையமைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார்.

இந்த நேரத்தில்தான், இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் “ஐக்கி பெர்ரி” என்ற மேடைப் பெயரை உருவாக்கினார். அதன்பிறகு ஐக்கி, நிறைய ராப் பாடல்கள் எழுதி, மியூசிக் வீடியோவிலும் தோன்றினார்.

ஜனவரி 2020-இல் ஐக்கி தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.

அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி’ வெளிச்சத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் போல என நினைத்தனர். ஆனால், அவருக்கு தஞ்சாவூர் என்பது தெரியவந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் திகைத்து விட்டனர்.

அப்படி ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை ஐக்கி யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் போகவில்லை. சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும், தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். மற்ற போட்டியாளர்கள் யாரிடமும் அவ்வளவாக தொடர்பில் இருக்கமாட்டார்கள். ஆனால் ஐக்கி அதிலும் வித்தியாசமாகத் தான் இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு ஐக்கி பெர்ரி, தன்னுடன் விளையாடிய சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று நட்பு பாராட்டுகிறார். அதே நேரம் தனது ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஐக்கி தற்போது தனது யூடியூப் சேனலில், ’எலா’ என்ற புது ராப் சாங் வெளியிட்டுள்ளார். வழக்கம்போல இந்த பாடலையும் ஐக்கியின் நண்பர் தேவ் மேஜர் தான் இசையமைத்துள்ளார். ஐக்கி இந்த பாடலை எழுதி, பாடியுள்ளார். பாடலின் ஆரம்பத்தில் முதலில் ஐக்கி ஒரு பள்ளி சிறுமியாக வருகிறார். பிறகு அப்படியே காண்டிராஸ்ட் லுக்கில் பார்பி டால் போல வந்து பாடி அசத்துகிறார்.

ஓடக்கர ஒருத்திய காட்டவா?

கிராமத்து காவியம் சொல்லவா?

ஆத்தாங்கர அழகிய பாடவா?

கரிசல்மண் காதல் பேசவா ? 

என ஐக்கி எழுதிய பாடல் வரிகள் அப்படியே அவர் தஞ்சாவூர் பெண் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. அப்படி ஒரு அட்டகாசமான தமிழில் மெலடி பாடல் வரிகளை, அப்படியே ஃப்யூசன் மியூசிக்குக்கு ஏற்றாற்போல் பாடியிருக்கிறார் ஐக்கி.  

இப்போது ஐக்கியின் இந்த ’எலா’ பாடல் தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss fame iykki berry new rap song goes viral on social media