Advertisment

அழகிப் போட்டி டூ சீரியல் நடிகை... பிக் பாஸ் சம்யுக்தா சக்சஸ் ரவுண்ட்

Bigg boss fame samyuktha new serial amman in colors tamil: கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் அம்மன் சீரியலில் சம்யுக்தா நடிக்க உள்ளார். சம்யுக்தா மற்றும் அம்மன் சீரியல் பற்றிய செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
அழகிப் போட்டி டூ சீரியல் நடிகை... பிக் பாஸ் சம்யுக்தா சக்சஸ் ரவுண்ட்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் நான்கில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. இவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் அம்மன் சீரியலில் நடிக்கவுள்ளார்.

Advertisment

பக்தி சீரியலான அம்மனில் பவித்ரா கௌடா மற்றும் அமல்ஜித் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நந்திதா, அனு, அவினாஷ் போன்றோரும் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். இந்த அம்மன் சீரியலில் தற்போது சம்யுக்தாவும் நடிக்க உள்ளார். இதனால் சம்யுக்தா மற்றும் அம்மன் சீரியல் பற்றிய செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

சம்யுக்தா இதற்கு முன் சன் டிவியில் ஒளிப்பரப்பான சந்திரகுமாரி சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி-2 சீரியல்களின் மெகா சங்கமம் பகுதியில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.

சம்யுக்தா அழகிப் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கு முன் இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் அழகி போட்டிகளில் கலந்துக் கொண்டதன் மூலம் பட வாய்ப்புகளும் வந்தது. அதன் மூலம் மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகை, மாடல் அழகி, தொழில் முனைவர், பரத நாட்டிய கலைஞர், ஊட்டச்சத்து நிபுணர் என பன்முகம் கொண்டவர் சம்யுக்தா. திருமணமான இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Colors Tv Serial Bigboss Samyuktha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment