Advertisment

சினிமாவில் நடிக்கிறார் ‘பிக் பாஸ்’ ஜூலி

‘பிக் பாஸ்’ ஜூலி, விமலின் ‘மன்னர் வகையறா’ படத்தில் கல்யாணப் பெண்ணாக நடித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss julie

‘பிக் பாஸ்’ ஜூலி, விமலின் ‘மன்னர் வகையறா’ படத்தில் கல்யாணப் பெண்ணாக நடித்துள்ளார்.

Advertisment

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்துவரும் படம் ‘மன்னர் வகையறா’. ‘கயல்’ ஆனந்தி, சாந்தினி தமிழரசன் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, விமல் தன்னுடைய அரசு ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து வெளியிடுகிறார். பட்டுக்கோட்டை பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில், ‘பிக் பாஸ்’ ஜூலி ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். இவர் நடித்த காட்சி, சமீபத்தில் படமாக்கப்பட்டது. கல்யாண வைபவம் நடக்கும் அந்தக் காட்சியில், கல்யாணப் பெண்ணாக நடித்துள்ளார் ஜூலி. ஏற்கெனவே குறும்படத்தில் நடித்துள்ள ஜூலிக்கு, இதுதான் முதல் படம்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி, தனக்கு வி.ஜே.வாக வேண்டும் என்பது ஆசை எனத் தெரிவித்திருந்தார். அதன்படியே தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘ஓடி விளையாடி பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி.

Tamil Cinema Anandhi Vimal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment