லாஸ்லியா தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகு, நிகழ்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

Losliya Mariyanesan Father Passed Away
லாஸ்லியாவின் தந்தை மரணம்

Losliya Mariyanesan: கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மற்றொரு போட்டியாளர் கவினுடன் ஏற்பட்ட காதலால் சமூக வலைதளங்களில் வைரலானார். அதோடு இவருக்கு ஆர்மிக்களும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை நேற்று, திடீரென காலமானதாக வெளி வந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகு, நிகழ்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. அவர் தனது மகளை கண்டித்தது மட்டுமன்றி தனது மகனை காதலிக்கும் கவினிடமும் நாசூக்காக அவரது தவறை சுட்டிக் காட்டினார். அந்த எபிசோடிற்குப் பிறகு மரியநேசனுக்கும் ஆர்மிக்கள் உருவாகின.

இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை லாஸ்லியாவும், இயக்குநர் சேரனும் ட்விட்டரில் உறுதிப் படுத்தியிருக்கிறார்காள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss losliya father mariyanesan passed away

Next Story
இந்தியாவில் அதிக லைக்குகளை அள்ளி சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் டீசர்master movie, vijay master, master teaser, master teaser new record, மாஸ்டர், விஜய், மாஸ்டர் டீசர் புதிய சாதனை, master teaser video likes new record, master teaser video, vijay fans celebrates master video, விஜய் சேதுபதி, vijay sethupathi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com